Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் குவிந்த ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2023
10:07

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நடைபெற்ற ஆடித்தபசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருமணமாகாத ஏராளமான பெண்கள் சுவாமிகளுக்கு அணிவித்த மாலைகளை பிரசாதமாக பெற்று சென்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 21ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், அன்னம்,கமலம், யானை,கிளி விருஷபம் காமதேனும்,குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும்,பூப்பல்லக்கு ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை ஆனந்தவல்லி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே உலா வந்தார். அப்போது ஏராளமானோர் அம்மனை அர்ச்சனை செய்து வழிபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு மண்டகப்படி நேற்று நடைபெற்றதை முன்னிட்டு கோயில் முன்பாக மண்டகப்படி அமைக்கப்பட்டு அங்கு ஆனந்தவல்லி அம்மன் தபசு கோலத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து விருஷப வாகனத்தில் சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சி கொடுத்தார்.பின்னர் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமியை சுற்றி 3 முறை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை பிரசாதமாக பெற்றுச் சென்றால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்பப்படுவதால் ஏராளமான பெண்கள் சுவாமிகளுக்கு அணிவித்த மாலைகளை பெற்றுக் கொண்டு சென்றனர்.இந்நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar