Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை கோவில் நிலத்தை மீட்க ... கண் திறந்த காளஹஸ்தி காசி விஸ்வநாதர்..! பக்தர்கள் பரவச தரிசனம் கண் திறந்த காளஹஸ்தி காசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 4 அஸ்திரங்கள்; தீமைகள் அழியும், நல்ல மழை கிடைக்கும்..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 4 அஸ்திரங்கள்; தீமைகள் அழியும், நல்ல மழை கிடைக்கும்..!

பதிவு செய்த நாள்

01 ஆக
2023
05:08

காங்கேயம்; சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நான்கு அஸ்திரங்கள், 101 ரூபாய், ஆறு எலுமிச்சம் பழம் வைத்து நேற்று முதல் பூஜிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் சிவன்மலை ஆண்டவர் குறிப்பால் உணர்த்தப்படும் பொருள், பெட்டியில் வைத்து பூஜை செய்வது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் இருக்கும். அதேசமயம் பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக இருக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த ஜூலை, 17ம் தேதி முதல், தீர்த்தக் கலசம் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்துாரை சேர்ந்த கோகுல்ராஜா, 40, கனவில் விருஷ்ப அஸ்திரம், தனுார்பாண அஸ்திரம், வருண அஸ்திரம், பாசுபத அஸ்திரம், ஆறு எலுமிச்சம் பழம், 101 ரூபாய் வைக்க உத்தரவானது. இதையடுத்து இந்தப் பொருட்கள், இன்று முதல் பெட்டியில் இடம் பெற்றுள்ளது. முக்கிய அஸ்திரங்கள் இடம் பெற்றுள்ளதால் தீமைகள் அழியும், வருண அஸ்திரத்தால் நல்ல மழை கிடைக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar