Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் ... நாகம்மாள் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குடம் நாகம்மாள் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது;இது அரவணைப்பதற்கான காலம் சுதந்திர தின விழாவில் சத்குரு பேச்சு
எழுத்தின் அளவு:
ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது;இது அரவணைப்பதற்கான காலம் சுதந்திர தின விழாவில் சத்குரு பேச்சு

பதிவு செய்த நாள்

15 ஆக
2023
06:08

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த, 77வது சுதந்திர தின விழாவில், வால் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்து விட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம் மூலம் உலகை அரவணைக்க வேண்டிய காலம் இது என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகா மையம் சார்பில், 77வது சுதந்திர தின விழா, ஈஷாவில் உள்ள ஆதியோகி முன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அங்கிருந்த கொடி கம்பத்தில், சத்குரு, தேசிய கொடியேற்று, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து புராஜெக்ட் சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில்," நம் பாரத தேசம் சுதந்திரம் அடைந்து, 77வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் நம் தேசம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. உலகில் வேறு எந்த தேசமும் இந்த அளவிற்கு அதிக வலிகளையும், வேதனைகளையும் அனுபவித்தது இல்லை எனலாம். பாரத தேசத்தில் தோன்றிய கணிதம் தான் தற்போதைய பல அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் முதுகெலும்பாக இருக்கிறது என, சர்வதேச விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்போது பலர் அதிக காலம் உயிர் வாழ்வதற்கு உதவியாக இருக்கும் அறுவை சிகிச்சை முறை, நம் தேசத்தில் சுசுருதர் போன்றவர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் தேசத்தில் சிறப்பாக இருந்துள்ளது. ஆனால் கடந்த 800, 900 ஆண்டுகளில், இவையெல்லாம் பெரும் சீரழிவுக்கு உள்ளாகியது. வேறு எந்த தேசத்திலும் இந்த அளவிற்கு சேதம் நடைபெறவில்லை. உலக அளவில் சிறந்து விளங்கும், 500 பெரு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் இருக்கிறார்கள். மற்ற தேசத்தை ஆக்கிரமிக்கும் மனநிலையுடம் அவர்கள் இந்த பொறுப்புகளை அடையவில்லை. எல்லோரையும் அரவணைக்கும் பண்பாலும், திறமைகளாலும் இப்பொறுப்புகளை அடைந்துள்ளனர். இதுதான் முன்னேற்றத்திற்கான சிறந்த வழி.

ஆக்கிரமிக்கும் காலம் முடிவடைந்து விட்டது. இது அரவணைப்பதற்கான காலம். நம் தேசத்தில் தோன்றிய அறிவியல், கலாச்சாரம், பொருளாதாரம், இசை என, எல்லாவற்றின் மூலம் உலகில் நாம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வாள் அல்லது துப்பாக்கியால் உலகில் தாக்கம் ஏற்படுத்தும் காலம் முடிவடைந்து விட்டது. பாரதத்தில் தோன்றிய யோகாவின் மூலம் பெரும் தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரதமரின் முயற்சியால் யோகா உலக அளவில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள பல்கலைகளில், யோகா செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் என்று யாரும் கற்பனை கூட செய்து பார்த்து இருக்க மாட்டார்கள். நம் பாரத தேசம் தற்போது பல வழிகளில் முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்ற பயணத்தில், தமிழ் மக்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும். நம்மிடம் அந்த திறமையும், வாய்ப்பும் உள்ளது. இந்த 77வது சுதந்திர தினத்தில், அனைவரும் இதற்கான உறுதியை எடுத்து கொள்ள வேண்டும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar