Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் இடியால் ஏற்பட்ட தீ; ... ஆடி அமாவாசை ; பிதுர்பூஜை செய்வது நல்ல பலன் தரும் ஆடி அமாவாசை ; பிதுர்பூஜை செய்வது நல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெய்வ பக்தி, தேச பக்திதுணைக்கொண்டு நாடு முன்னேற உழைப்போம்: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசி
எழுத்தின் அளவு:
தெய்வ பக்தி, தேச பக்திதுணைக்கொண்டு நாடு முன்னேற உழைப்போம்: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசி

பதிவு செய்த நாள்

15 ஆக
2023
10:08

வாரணாசி : காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், வாரணாசி முகாமில் தமிழ்நாட்டிலிருந்து தரிசனத்திற்கு  வந்திருந்த பக்தர்களுக்கு 77 ஆவது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தும் தேசியக் கொடி வழங்கியும், ஆசி வழங்கினார்.

தொடங்கி வைத்து ஆற்றிய உரை: “இந்தியாவில் பன்மொழிகளை தாய் மொழிகளாகக் கொண்ட 130 கோடிக்கு மேற்பட்ட  மக்கள் பல்வகை உணவு உடை பழக்க வழக்கங்களை தம் தம் பாரம்பரியமாக மேற்கொண்டவர்களாக இருப்பினும், “பாரதம்” ஒரே தேசம், என்பது நிதர்ஸனம். தேசம் முழுவதும் தர்மமும் ஒன்றேதான். சுதந்திரம் என்பது தர்மத்தை அனுஷ்டிப்பதற்கான சுதந்திரம் என்பதும். பெற்றோர் சொல்படி நடப்பது, விருந்தினர்களை உபசரிப்பது போன்றவை எளிமையான தர்மமீகும். மனிதர்களின் இயல்பான தயை, கருணை அன்பு இரக்கம் முதலியவற்றை வளரச் செய்வது தர்மம். அவரவர் நிலையில் தர்மம் தவறாது நெஞ்சில் இரக்கமுடன் கடமையாற்றியும், செய்ய வேண்டியவற்றை செய்தும், செய்யத் தகாதனவற்றை அரவே தவிர்த்தும் பல்வகை சமூகத்தினர் அனைவரின் முன்னேற்றத்திற்கும்  தொண்டாக, நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் செயல்படுவது தர்மம்.  நமது தேசத்தில் தர்மம் வளர்வதற்காக பாடுபட வேண்டிய நேரமிது. அறம் செய விரும்பு என்பதே நல் வாக்காகும். 1947ல் முதல் சுதந்திர தினத்தன்று ஸ்ரீபரமாச்சார்யர்கள் அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியதோடு உண்மையான சுதந்திரம் என்பது தர்மத்தைக் கடைபிடித்து கிடைக்கக் கூடிய ஆன்மிக சுதந்திரமே, என்றார்கள். புதுப் பெரியவர்கள், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றமையுடன் தர்ம நெறியில் வாழ வேண்டும் என அரும்பாடு பட்டார்கள். மக்கள் அனைவருக்கும் குரு பக்தி, தெய்வ பக்தி தேசபக்தி இம் மூன்றும் அவசியம். தெய்வ பக்தி தேசபக்தி என இவை இரண்டும் நிறம்பிய ஏராளமான பாடல்களைப் பாடிய மகாகவி பாரதியார், 1919 ஆண்டு கும்பகோணம் ஸ்ரீமடத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்ட நவராத்திரி விழாவினை கண்டு பக்தி மேலீட்டால்,” ஸ்ரீமடம் தந்தி பேசியது” என்ற தலைப்பில் பராசக்தி பக்தரான பாரதியார் ஸ்ரீமடத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். 1934ல் தென் இந்தியாவிலிருந்து பூஜை முதலியவைகளுடன் யாத்திரை செய்து காசி மாநகர் அடைந்த ஸ்ரீபரமாச்சார்யாளுக்கு  பண்டிட் மதன் மோகன் மாளவியா அளித்த மாபெரும் வரவேற்பை இந்த சுதந்திர திருநாளன்று காசி முகாமில் நினைவு கூறுவதில்  நாம் பெருமிதம் கொள்கிறோம். அஹிம்ஸை வழியில் அறம் வளர்த்து அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டி தெய்வ பக்தி, தேச பக்தி முதலியவற்றின் துணை கொண்டு, நாடு முன்னேற, நாம் முன்னேற நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து உழைப்போம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர என்று உரையாற்றினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி சங்கரமடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்,  ராமானுஜர் ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம்நகர் கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் நேற்று ஸ்ரீ சங்கரஜெயந்தி வைபவம் பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar