தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். அதை பின்பற்றும் ஒரே ஜீவன் காகம் மட்டுமே. ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என மற்ற காகங்களை அழைத்த பின்னரே உண்ணும் பண்பு கொண்டது இது. காகத்திற்கு சோறிட்டால் முன்னோர் ஆசி கிடைக்கும். எமலோகத்தின் வாசலில் காவல்புரியும் இதை ‘எமதர்மனின் துாதுவன்’ என்பர். பிதுர் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலமான கயாவில் ‘காக சிலா’ என்றொரு பாறை உள்ளது. அதில் தான் பிண்டம் வைத்து முன்னோர்களை வணங்குவர்.