Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ... தேவனாபுரம் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா தேவனாபுரம் கரிவரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நாகருக்கு பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நாகருக்கு பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 ஆக
2023
04:08

நாகர்கோவில் : நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு விழாவை ஒட்டி பெண்கள், நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். நாகரை மூலவராகக் கொண்டு நாகர்கோவிலில் அமைந்துள்ளது நாகராஜா கோவில். இந்த பெயரில் தான் நாகர்கோவில் ஊர் பெயரும் அமைந்துள்ளது. கோவில் பெரிதாக இருந்தாலும் நாகர் பிரதிஷ்டை இன்னும் ஓலைக்கூரையில் தான் அமைந்துள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து வரும் மண், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்படி சிறப்பு பெற்ற நாகராஜா கோவிலில் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். இந்த நாளில் நாகருக்கு பால் அபிஷேகம் நடத்தினால், ராகு-கேது தோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும், திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு முதல் ஆவணி ஞாயிறு நாளில், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலை மோதியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று நாகருக்கு பாலபிஷேகம் நடத்தி வழிபாடு நடத்தினர். இந்த நாளில் நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar