Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சக்தி செல்வ விநாயகர் கோவிலில் இன்று ... பழநியில் ஆக.26ல் பிரம்மோற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2023
03:08

அருப்புக்கோட்டை: கோட்டை அருகே பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கள் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி தும்முசின்னம்பட்டி கிராமத்தில் பழமையான சிலை இருப்பதாக குணசேகரநல்லூரை சேர்ந்த கண்ணன் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர், பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், செல்ல பாண்டியன் ஆகியோரிடம் தகவல் கூறினார். அவர்கள் சென்று கள ஆய்வு செய்தபோது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியரின் சிற்பம் என தெரிய வந்தது. அவர்கள் கூறியதாவது : நமது முன்னோர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக நினைவுக் கற்களை நட்டு வைத்து வழிபட்டு வந்துள்ளனர். அந்த கற்கள் தொடக்கத்தில் ஒழுங்கற்றவையாகவும், உயரமாகவும் இருந்தன. அவற்றை நெடுங்கல் என்று அழைப்பர். இந்த நெடுங்கல் வழிபாட்டின் தொடர்ச்சியாக நடுக்கல் வழிபாட்டை கூறலாம். நடுக்கற்களில் கல்வெட்டுகள், உருவங்கள் எவையேனும் ஒன்று இடம்பெற்றிருக்கும். அல்லது இரண்டுமே இருக்கும். தற்போது நாங்கள் கண்டறிந்த நடுக்கல்லில் இரண்டு உருவங்கள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. ஒன்றரை அடி உயரம் ஒன்றரை அடி அகலம் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் வலது புறம் உள்ள வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் உள்ளது. இடதுபுறம் உள்ள வீரனின் வலது கையில் வாள் போன்ற ஆயுதமும், இடது கையில் ஒரு ஆயுதமும் ஏந்தி போர் புரியும் வீரர்கள் போன்று சிற்பம் முற்கால பாண்டியருக்கே உரிய கலைபாணியில் செதுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் இப்பகுதியில் நடந்த போரில் ஈடுபட்டு ஊர் நலனுக்காக இறந்திருக்கலாம், என்று கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar