Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓணம் பண்டிகை: குருவாயூர் கோவிலில் ... பழநி முருகன் கோயிலில் தமிழக கவர்னர் ரவி சுவாமி தரிசனம்; தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் பழநி முருகன் கோயிலில் தமிழக கவர்னர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைக்க சர்வே பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைக்க சர்வே பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2023
06:08

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் ரோப்கார் அமைக்க மலைக்கு பின்புறம் மலை அடிவாரத்தில் சர்வே பணிகள் நேற்று துவங்கியது.

முருகப்பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் மூலவர் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். உள்ளூர், வெளியூர்களில் இருந்து தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தவிர அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்ள வருகின்றனர். பவர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். இங்குள்ள மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில், சுனை தீர்த்தம் உள்ளது. காசி விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. குன்றத்து மலை மேல் ரோப் கார் அமைக்க எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரை வந்த பொழுது திருப்பரங்குன்றம் மலையில் ரோப் கார் சேவைக்கான சாத்திய கூறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். முதல் கட்டமாக சில தினங்களுக்கு முன்பு கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மலை மேல் ரோப்கார் அமைப்பது சம்பந்தமாக கருத்து கேட்பு நடைபெற்றது. அனைத்து பக்தர்களும் கட்டாயம் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். மலைக்குப் பின்புறம் மலை அடிவாரத்தில் ரோப்கார் அமைப்பதற்கான சர்வே பணிகளை சென்னை ஐடி காட் நிறுவனத்தினர் இன்று துவக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை: கோவை ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாயி 100வது பிறந்த நாள் விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வேட்டைக்காரன் சுவாமி திருவிழாவில்,50 கிடாய்கள் வெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar