Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரேணுகா தேவி அம்மன் கோவிலில் ... ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் வரலட்சுமி நோன்பு பூஜை ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை; ஜி20 மாநாட்டின் முகப்பில் இடம் பெறுகிறது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை; ஜி20 மாநாட்டின் முகப்பில் இடம் பெறுகிறது!

பதிவு செய்த நாள்

25 ஆக
2023
05:08

தஞ்சாவூர், டில்லியில் நடைபெறும் ஜி–20 மாநாடு மையத்தின் முகப்பில், அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை சுவாமிமலையில் இருந்து புறப்பட்டது.

டில்லி, பிரகதி மைதானத்தில், அடுத்த மாதம் 9,10 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடக்கிறது. மாநாட்டு நடைபெறும் அரங்கத்தின் முகப்பில் அமைப்பதற்காக, மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஆப் ஆர்ட் சார்பில், சோழர் கால நடராஜர் சிலையை வடிவமைக்க முடிவு செய்தது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்த ஸ்ரீ தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான ராதாகிருஷ்ணன், ஶ்ரீகண்டன், சுவாமிநாதன் மூவரும் இணைந்து, சிலையை வடிவமைக்கும் பணி துவங்கினர். சிலைகள் 75 சதவீீதம் முழுமையடைந்த நிலையில், இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஆப் ஆர்ட் மைய  தலைவர் ஆர்த்தல் பாண்டியா, மைய அலுவலர்கள் ஜவகர் பிரசாத், மனோகன் தீட்சத் ஆகியோர், சிலையை பெற்றுக்கொண்டனர். பின்னர், சிலை சுமார் பொக்லீன் இயந்திரம் மூலம், லாரியில் ஏற்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்கள், சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டு மலர் துாவி சிலையை வழியனுப்பி வைத்தனர். சிலையானது உளுந்துார்பேட்டை, சேலம், பெங்களூர், நாக்பூர், ஆக்ரா வழியாக டில்லிக்கு வரும் 28ம் தேதி சென்றடையும் எனவும், சிலையை பிரதமர் மோடி திறக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


இது குறித்து ஸ்பதிகள் கூறியதாவது; செம்பு, பித்தளை, தங்கம், வெள்ளி, வெள்ளீயம், இரும்பு, பாதரசம் உள்ளிட்ட அஷ்ட(எட்டு) தாதுக்களால் உருவாக்கப்பட்டதால் சிலை கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. இச்சிலை 28 அடி உயரத்தில், 21 அடி அகலத்திலும், சுமார் 25 ஆயிரம் கிலோ எடையில், 51 தீட்சுடர்கள் திருவாச்சியில் இடம் பெற்றுள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar