Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் 27,000 கோவில்களில் பதவிக்கு ... ஓணம் பண்டிகை; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஓணம் பண்டிகை; சித்தாபுதூர் ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்; ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்; ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2023
10:08

கேரளாவில் வழக்கமான உற்சாகத்துடன், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்க, வாமன அவதாரம் எடுத்த திருமாலை வணங்கியும், ஆண்டுக்கு ஒருமுறை, தன் மக்களை காண வர வேண்டும் என, வரம் வாங்கிய மகாபலியை வரவேற்றும், கேரளாவில், ஆண்டுதோறும், ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை, அறுவடை திருநாளாகவும் போற்றப்படுகிறது. கேரளாவில், ஓணம் பண்டிகை நேற்று, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மக்கள், அதிகாலையில் எழுந்து, அத்தப்பூ கோலமிட்டு, கோவில்களில் வழிபட்டனர். திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவில், சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், மக்கள் கூட்டம் அலை மோதியது. விதவிதமாக உணவு சமைத்து, நண்பர்களுக்கு விருந்து அளித்து மக்கள் மகிழ்ந்தனர்.

ஓணம் பண்டிகையில் மிகவும் பிரசித்தி பெற்றது பூக்கோலம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகியவற்றால் கோலத்தை அலங்கரிப்பர். கேரள மக்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் விதத்தில், வாசலில் பூக்கோலம் வரைகின்றனர். நறுமணம் கமழும் பூக்களைப் போல, உள்ளத்திலும் இல்லத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதும் இதன் நோக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கோலம் கலையுணர்வை வெளிப்படுத்தும். தும்பைப் பூவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அளவில் மிகச் சிறிய இது சிவனுக்கு உரியது. லட்சுமி கடாட்சத்திற்காகவும் பூக்கோலம் இடுவதுண்டு. கேரளாவின் பண்பாட்டுச் சின்னமாக பூக்கோலம் திகழ்கிறது.

அறுவடைத்திருநாள்: கேரளாவின் பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவுபடுத்தும் வகையில், விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கமாதம் என்னும் ஆவணியே மலையாளத்தின் முதல் மாதம். இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரம் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் ஓணம் நடந்ததை அறியமுடிகிறது. விழாவின் போது ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர்.

மன்னருக்கு வரவேற்பு: மகாபலி மன்னர் மலைநாடாக விளங்கிய கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். அவரது ஆட்சி செழிப்பாக இருந்தது. தானம், தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கினார். அவரது ஆட்சி போல், இன்றும் தங்கள் மண் செழிப்புடன் திகழ வேண்டும் என்ற கருத்தில், மகாபலியை நினைவு கூர்ந்து, அவரை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கண்கவரும் யானை பட்டாளம்: தெருவில் ஒரு யானை வந்தாலே குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பர். கேரளாவில் ஓணத்திருவிழாவில் யானைப்பட்டாளத்தையே கண்டு ரசிக்கலாம். அவற்றின் நெற்றியை தங்கத்தட்டினாலான முகப்படாமினால் அழகுபடுத்தி இருப்பர். பாரம்பரியம் மிக்க பட்டாடைகள், ஒயிட்மெட்டல், வெள்ளியால் செய்யப்பட்ட குடைகள், பட்டுக்கயிறு, பிரத்யேக அணிகலன்கள், உடலில் வரையப்பட்டிருக்கும் அலங்காரம் என கலைநயத்துடன் யானைகள் அணிவகுத்துச் செல்வது தனியழகு. இங்கு நடக்கும் மரத் தொழிலுக்கு யானைகள் மிகவும் உதவுகின்றன. மேலும், இவை விநாயகரின் அம்சம் என்பதால் தெய்வீகமானவை. எனவே, அவற்றிற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் ஊர்வலம் நடத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த சுவர்ண பாரதி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வற்றாத ஜீவநதியாக சலசலத்து ஓடிக் ... மேலும்
 
temple news
கிட்டத்தட்ட 1,200 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலத்தில் பூர்ணா நதிக்கரையில் காலடி எனும் அழகிய கிராமத்தில் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar