Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணி ஓசை கேட்டு நடந்து.... கோயிலில் பரிகாரத்திற்காக பூஜை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நினைத்தது நடக்கும்...சொன்னது பலிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2023
05:09


காஞ்சி மஹாபெரியவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை முன்னாள் அமைச்சர் கே.ராஜாராம் விளக்குகிறார்.
‘‘எனக்கு விவசாயத்துறை பொறுப்பு தரப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் வறட்சி நிலவியது. காஞ்சி மஹாபெரியவரின் நினைவு வரவே,  காஞ்சிபுரம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்ததும், மடத்திற்கு சுவாமிகளைத் தரிசிக்க வருவதாகத் தகவல் அனுப்பினேன். மடத்தின் பொறுப்பாளர் திரு. நீலகண்ட அய்யர் சிறுவயது முதலே என்னை நன்றாக அறிந்தவர். என்னைக் கண்டதும், ‘இன்னும் ராஜாராம் வரவில்லையா?’ என பெரியவா கேட்டார். இப்போது கண் அயர்ந்து துாங்குறார்’ என்றார்.
 ‘நான் சுவாமிகளைத் தரிசித்து விட்டு மட்டும் செல்கிறேன்’ என அவர் படுத்திருந்த மேடைக்கு எதிரில் நின்று கும்பிட்டேன். ஓரிரு நிமிடத்தில் சுவாமிகள் எழுந்தார். என்னைப் பார்த்ததும், ‘எப்போ வந்தே?’ எனக் கேட்டார். ‘இப்போ தான் சுவாமி’ என்றேன்.  ‘எதற்காக என்னைப் பார்க்கணும் என தகவல் அனுப்பின?’ எனக் கேட்டார்.
‘எங்கும் மழையில்லே... இந்த நேரத்தில் விவசாயத்துறை அமைச்சர் பதவி தந்துள்ளார்கள். மழையில்லாமல் போனால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எப்படி கிடைக்கும்? யாகம் செய்தால் மழை வரும் என்கிறார்கள், தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளவே நேரில் வந்தேன்’ என்றேன். கண்மூடி தியானித்து விட்டு, ‘நாளைக்கே காமாட்சியம்மன் கோயிலில் யாகம் நடத்த ஏற்பாடு செய்றேன்’ என்றார். சுவாமிகளுக்கு நன்றி சொல்லி விடைபெற்றேன். அன்று மாலையில் செங்கல்பட்டில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காரில் துாங்கியபடி ஸ்ரீபெரும்புதுாரை நோக்கிப் பயணித்தேன். திடீரென பலத்த காற்று வீசவே எழுந்து விட்டேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். காரின் முன் கண்ணாடி மீது குடத்தில் இருந்து கொட்டுவது போல் மழை பெய்ய ஆரம்பித்தது.  அப்படியொரு கனமழை! காஞ்சி மஹாபெரியவர் கொடுத்த வாக்குறுதி சில மணி நேரத்திற்குள்ளாகவே பலித்தது. பூமி எங்கும் குளிர விவசாயத்துக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைத்தது’’ என்றார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar