Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா: ... கன்னியாகுமரி பகவதியம்மன் நவராத்திரி விழா வரும் 15ல் துவக்கம்! கன்னியாகுமரி பகவதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரத்தில் சுவாமி ஊர்வலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 அக்
2012
10:10

நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கு ‌‌பெறுவதற்காக, சுசீந்திரத்தில் இருந்து, முன்னுதித்த நங்கை தேவி ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது தமிழகம் மற்றும் கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை நடத்தினர். கேரளா, தமிழகத்துடன் இணைந்திருந்த காலத்தில் திருவிதாங்கூர் ராஜியத்தின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரத்தில், நவராத்திரி விழா நடைபெற்றது. 1840 ம் ஆண்டு, சுவாதி திருநாள் மன்னர் காலத்தில் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பின், நவராத்திரி விழாவுக்கு பத்மனாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் ஊர்வலமாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் அக்.,15 ல் துவங்குகிறது. இதற்காக, இன்று பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி ஊர்வலம் புறப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக, நேற்று காலை சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்தநங்கை விக்ரகம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது கேரள போலீசாரின் பேன்ட் வாத்யம் முழங்கப்பட்டது. கேரள- தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலம் நேற்றிரவு வேளிமலை குமாரகோவில் வந்தது. இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி ஊர்வலம் புறப்பட்டு, அக்.,14 ல், திருவனந்தபுரம் சென்றடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar