Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழஞ்சிறை தர்ம முனீஸ்வரர் கோயிலில் ... சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பெரியகுளம் காளியம்மன் அருள்பாலிப்பு சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: செப்.10ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: செப்.10ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

08 செப்
2023
06:09

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா செப்.10ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். நாளை காலை கோயிலில் அனுக்ஞை பூஜைகளும், மாலையில் அங்குரார்ப்பணம் உள்ளிட்ட  பூர்வாங்க பூஜைகளும் நடைபெறும். மறுநாள், செப்.10  காலையில் கொடிமரத்திற்கும், கொடிப்படத்திற்கும் பூஜைகள் நடந்து கொடியேற்றமும், மாலையில் சுவாமிக்கு காப்புக்கட்டியும் சதுர்த்தி விழா துவங்குகிறது.  அன்று  இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்ஸவ கற்பகவிநாயகர் திருவீதி வலம் வருவார். மறுநாள் முதல் தினசரி காலையில் வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். செப்.15ல் மாலையில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். செப்.18ல் காலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளலும், மாலையில் தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். அன்றைய தினம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள்  தரிசிக்கலாம். செப்.19ல் காலையில் கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு  விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். மதியம் 2:00 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். மாலையில் கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக உரை,இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி  பழ.கரு.லெ.ராம.சா.தண்ணீர்மலை மற்றும் காரைக்குடி முரு.வீர.சா.க.சாமிநாதன் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar