Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் சக்கர தீர்த்த குளத்தை ... சிறுவாபுரியில் பாலசுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் சிறுவாபுரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி உச்சிஷ்ட கணபதி கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி உச்சிஷ்ட கணபதி கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

09 செப்
2023
01:09

திருநெல்வேலி : திருநெல்வேலியில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி கோவில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரம் என்னும் திருத்தலத்தில் ஸ்ரீ மூர்த்தி விநாயகா் என்ற ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனி கோயிலாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோகநிலையில்  இடது மடியில் அம்பாளுடன் அருள் பாலிக்கிறார்.  இதன் கட்டட அமைப்பும் பழமையும், சுற்றுச்சுவர்களின் தன்மையும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோயில் என்பதை பறைசாற்றுகிறது. சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது. சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோயிலில் ஆவணி மாதம் வரும் விநாயகா் சதுா்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக நேற்று மாலை  அனுக்கை, விக்னேஸ்வர  பூஜை, வாஸ்துசாந்தி அங்குராா்ப்பணம் ரக்ஷாபந்தனம் போன்றவைகள் நடைபெற்றன. திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு காலை யாகசாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 7.00 -8.00 க்குள் கன்யாலக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் கொடிக்கம்பத்திற்கு அபிஷேகம் நடைபெற்று, கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 10 தினங்கள் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவில் காலையில் யாகசாலை பூஜைகள் சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெறுகின்றது. மாலையில் விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெறுகின்றது. விழாவில் வரும் 16ம் தேதி 8ம் திருநாளில் மூலவருக்கு 1008 தேங்காய் அலங்காரமும் மாலையில் பச்சைசாத்தி திருவீதி உலாவும் நடைபெறும். வருகின்ற 18ம் தேதி ஸ்ரீ விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக நடைபெறுகிறது. நன்பகலில் தாமிரபரணி நதிக்கரையில் தீா்த்தவாாியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar