Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் ... சோழிங்கநல்லுர், இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நிறைவு சோழிங்கநல்லுர், இஸ்கான் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலில் 15 ஆண்டுகளுக்குபின் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலில் 15 ஆண்டுகளுக்குபின் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 செப்
2023
03:09

மயிலாடுதுறை: குத்தாலம் சோழீஸ்வரர் திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குபின் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் தரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்:-  
 
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்றும் சோழ மன்னன் திருப்பணிகள் செய்து வழிபட்டதால் சோழிஸ்வரர் என்றும் பெயர் பெற்றவர். அக்னி பகவானின் பாவங்களை போக்கியவர். சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் சனீஸ்வர பகவான் ஆஞ்சநேயர் வழிபட்ட தலம். ஆஞ்சநேயர் தாமரைப்பூ கொண்டு வழிபாடு நடத்திய தளம். சோளீஸ்வரர் சுவாமியை திருமண கோலத்தில் தரிசித்து தன் பாவங்களை போக்கிக் கொண்டார் அக்னி பகவான், பரத முனிவர் பிள்ளை பேரு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார் அந்த வேள்வியில் தோன்றியவர் தான் பரிமள சுகந்தநாயகி இறைவனை அடைய இத்தளத்தில் தவம் மேற்கொண்டார். இத்தலத்து பரிமள சுகந்த நாயை வழிபட திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூடும், சனி பகவான் சுயம்பு மூர்த்தியாக பாதாளத்தில் இருந்து தோன்றி வழிபட்டதால் இத்தளத்தில் உள்ள சனி ஈஸ்வர பகவானை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் போன்ற பல்வேறு சிறப்புகளை உடைய கோவில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்பு கோயில் புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு  கடந்த 6ம்தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு 6 கால யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றது.  இன்று 6ம்கால யாகசாலை பூஜையில் சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் நடைபெற்று பூரணாகுதி மகா தீபாரதனை நடைபெற்றது. மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. சுவாமி கருவறை தங்க கலசம், அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும், ஒரே நேரத்தில் வேதியர்கள் மந்திரங்கள் முழங்க  புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழா நடந்தது. இதில், ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி ... மேலும்
 
temple news
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar