Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க தகடுகளால் ஜொலிக்கும் கோரக்க ... ஆவணி சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆவணி சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் பல்லவர் கால மூத்ததேவி.. சோழர் கால அய்யனார் சிலை
எழுத்தின் அளவு:
காஞ்சியில் பல்லவர் கால மூத்ததேவி.. சோழர் கால அய்யனார் சிலை

பதிவு செய்த நாள்

11 செப்
2023
11:09

காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்சிறுணை பெருகல் கிராமத்தில், தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கத்தினர், பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தையும்; சோழர் கால அய்யனார் எனப்படும், சாஸ்தா சிலையையும் அடையாளப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்க நிறுவன செயலர் ராதாபாலன் கூறியதாவது: காஞ்சிபுரம் அடுத்த கீழ்சிறுணை பெருகல் கிராமத்தில், நேற்று முன்தினம் கள ஆய்வு செய்தோம். அங்கு, செல்லியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வயல்வெளிக்கு முன் உள்ள, துர்க்காத்தம்மன் கோவிலை ஆய்வு செய்தோம்.

முதல்முறை; அங்கு வழிபாட்டில் உள்ள, 7ம் நுாற்றாண்டை சேர்ந்த மணற்கல்லால் ஆன பழமையான சிலை ஒன்றை கண்டறிந்தோம். இது, தொன்மை வாய்ந்த மாந்தனும் மாந்தியும் இல்லாத, தனி மூத்ததேவி சிலை. காஞ்சியில், இதுபோன்ற சிலையை கண்டறிவது இதுவே முதல்முறை. அழகிய உருவம், அமைதியான முகத்துடன் உள்ள இந்த சிலை, 4.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் உள்ளது. பருத்த வயிற்றுடன் அமர்ந்த நிலையில், இவரின் தலையில் கரண்ட மகுடமும், காதில் குழைகளும் தரித்துள்ளார். பல்லவர்கள் ஆட்சி காலமான ஏழாம் நுாற்றாண்டில், தமிழர்களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்துஉள்ளார். நந்திவர்ம பல்லவ மன்னன், இதை, தவ்வை எனும் பெயரில் குலதெய்வமாக கொண்டாடி உள்ளார்.

தவ்வை வழிபாடு: பல்லவர் காலத்தை போலவே, பிற்கால சோழர்கள் காலத்திலும், சேட்டை என்ற பெயரில், தவ்வை வழிபாடு சிறப்புற்று இருந்ததாக, கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. அதேபோல, இங்குள்ள பொன்னியம்மன் கோவிலில், அம்மனாக வழிபட்டு வந்த தெய்வ சிற்பத்தையும் கண்டறிந்தோம். 2.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் உடைய இது, சோழர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் எனப்படும், சாஸ்தா சிற்பம் என்பதை, சிற்ப அமைப்பில் இருந்து அடையாளப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar