Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுடலை மகாராஜா பொங்கல் விழா : ... உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரையூரில் பழமையான 13ம் நூற்றாண்டு லட்சுமி நாராயணர் கற்சிலை கண்டுப்பிடிப்பு
எழுத்தின் அளவு:
பேரையூரில் பழமையான 13ம் நூற்றாண்டு லட்சுமி நாராயணர் கற்சிலை கண்டுப்பிடிப்பு

பதிவு செய்த நாள்

15 செப்
2023
01:09

பேரையூர்: பேரையூர் அருகே மோதகம் என்ற சுப்புலாபுரம் பகுதியில் 700 ஆண்டு பழமையான கற்சிலை கண்டறியப்பட்டது. பாண்டியநாடு பண் பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வ ரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, பாலகிருஷ்ணன், ஆய்வாளர் அனந்தகுமரன் கள ஆய்வு மேற்கொண்டனர். சாலையோரம் 700 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி., 13ம் நூற்றாண்டு) தலைப்பகுதி உடைந்த நிலையில் கற்சிலை கண் டறியப்பட்டது. தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது: பாண்டியர்காலத்தில் செங்குடி நாட்டின் கிராமமான மோதகம், வேளாண்மை, வணிகம் செய்வதில் சிறப்புடன் விளங்கியது. இங்கு பல வரலாற்றுத் தடயங்கள் புதைந்துள்ளன. மக்கள் வசிப்பிடம் இன்றி அரசாங்க பதிவேட்டில் மட்டும் ஆவாரம்பட்டி, சுப்புலாபுரம், கரியாம்பட்டி, தாத மடம் போன்ற 4 கிராமங்களின் தாய் கிராமம் என்ற பெயரில் மோதகம் தற்போதும் இருக்கிறது. இப்பகுதியில் காவல்துறை சோதனைச்சாவடி அருகே சாலையோரம் லட்சுமி நாராயணர் காணப்படுகிறது. கற்சிலை அதனை ஆய்வு செய்ததில், தலைப்பகுதி முற்றிலும் சிதைந்த நிலையில் மூன்றடி உயரத்தில் கற்சிலை உள்ளது. எஞ்சியவற்றை வைத்து பார்த்ததில் அது லட்சுமி நாராயணர் சிற்பம் என்று தெரிந்தது. சிவன் - பார்வதி இணைந்த உருவம் அர்த்தநாரீஸ்வரர் என்பதைப் போல, திருமாலும், லட்சுமியும் இணைந்த உருவமாக அர்த்த லட்சுமி நாராயணர் சிற்பம் உள்ளது. சமீப காலமாக லட்சுமி நாராயணர் சிற்பங்கள் தென் தமிழகத்தில் பரவலாக கிடைக்கிறது. நாராயணர் தனது இடது கையால் மனைவி லட்சுமியை அணைத்தபடியே அன்னை நாராயணரை தனது வலது கையால் இடைப்பகுதியின் ஊடே இடையில் பின்புறமாக பிடித்தபடியும் செதுக்கப்பட்டுள்ளது. நாராயணரின் இடது தொடையில் லட்சுமி அமர்ந்துள்ளார். நாராயணரின் மார்பில் ஆபரணங்கள் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இடையில் ஆடையானது கெண்டைக்கால் வரை இடம்பெற்றுள்ளது. லட்சுமியின் உருவமானது மேலாடை இன்றி, அரை ஆடையுடன் பாண்டியரின் கை காணப்படுகிறார். இச்சிற்ப வடிவமைப்பு, பிற்கால வண்ணத்தில் உருவானவை என்றும், கி.பி., 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் தெரிகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்;தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகிய ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar