Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவர்கள் வைத்த ஏழு அடி உயர ... காந்தாரா பட காட்சிகளை போல் விநாயகர் செட் ; சதுர்த்தி விழாவில் ருசிகரம் காந்தாரா பட காட்சிகளை போல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழியில் நீருக்கு அதிபதியான பழமையான வருணன் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திருச்சுழியில் நீருக்கு அதிபதியான பழமையான வருணன் சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

20 செப்
2023
01:09

திருச்சுழி : திருச்சுழி அருகே கண்மாயில் பழமையான வருணன் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

திருச்சுழி அருகே உலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் உள்ள கண்மாயில் பழமையான குமிழித்தூண் உள்ளது. இதை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் கள ஆய்வு செய்து கூறியதாவது:

தூணின் உயரம் 15 அடி. இதில் பெரியதாக வருணன் சிற்பம் உள்ளது. இவர் மழைக்கு அதிபதி ஆவார். அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவர். மேற்கு திசைக்கு உரியவராக உள்ள இவரின் வாகனம் முதலை. இவரது மனைவியின் பெயர் வாருணி, வருண பகவானை வழிபடும் போது தண்ணீர் பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்கிறது என்பது ஆண்டாண்டு காலமாக மக்களின் நம்பிக்கை. இந்தச் சிற்பத்தின் உயரம் 3 அடி ஆகும். சிற்பத்தில் வருண பகவான் 4 கரங்களோடு உள்ளார். வலது முன் கரத்தை அபய ஹஸ்தத்திலும், வலது மேற்கரத்தில் வஜ்ரமும், இடது மேல் கரத்தில் சூலமும், இடது கீழ்கரம் வரஹஸ்தத்திலும் உள்ளபடி காட்சி தருகிறார். தலையில் மகுடம் கரண்ட மகுடம், மகுடத்திற்கு மேல் பூந்தோரணம், கழுத்தில் ஆபரணங்கள் உள்ளன. இடுப்பில் உதிர பங்தம், இரண்டு கால்களிலும் தண்டை அணிந்து உள்ளார். ஒரு பீடத்தில் சுகாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். நமது முன்னோர்கள் அஷ்டதிக் பாலகர்களை அவர்கள் எதற்கு அதிபதியோ அதற்கு ஏற்றார் போல் அந்தந்த இடங்களில் அவர்களின் சிற்பங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளனர். உலக்குடி கண்மாயில் நீருக்கு அதிபதியான வருணனின் சிற்பத்தை வடிவமைத்து வணங்கி வந்துள்ளனர். இவர் ஆண்டில் பெரும்பாலான நாட்களில் நீருக்குள் மூழ்கி இருப்பதால் அந்தப் பகுதியில் எப்பொழுதும் விவசாயம் செழிப்பாக நடைபெற்று வந்துள்ளது. ஆரம்ப காலங்களில் பாண்டிய மன்னர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். அதன் தொடர்ச்சியாக நாயக்கர் மன்னர்களும் அந்த வழியை பின்பற்றினர். அதற்கு சாட்சியாக உலக்குடி கிராமத்தில் இந்த குமிழ்த்தூண் உயர்ந்த கம்பீரமாக காட்சி தருகிறது. இதன் காலம் 17ம் நூற்றாண்டு ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar