Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சம்பாசஷ்டி, சஷ்டி விரதம்; ... கேட்கும் வரம் தரும் கல்ப விருட்ச வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி கேட்கும் வரம் தரும் கல்ப விருட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதனத்தை தழைத்தோங்க செய்த ஆச்சாரியர் ஆதிசங்கரரின் 108 அடி உயர சிலை; நர்மதை நதிக்கரையில் திறப்பு
எழுத்தின் அளவு:
சனாதனத்தை தழைத்தோங்க செய்த ஆச்சாரியர் ஆதிசங்கரரின் 108 அடி உயர சிலை; நர்மதை நதிக்கரையில் திறப்பு

பதிவு செய்த நாள்

21 செப்
2023
11:09

மத்திய பிரதேசம், ஓம்காரேஸ்வரரில், நர்மதை நதிக்கரையில், 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா இன்று(செப்.,21) நடைபெற்றது.

கேரள மாநிலம், காலடியில் அவதரித்த ஆதிசங்கரர், தமது எட்டாவது வயதில், குருவை தேடி வீட்டை விட்டு வெளியேறி, நர்மதை நதிக்கரையில் இருந்த குகையில் தவம் செய்தார். அப்போது, கோவிந்த பகவத்பாதரை சந்தித்து, சன்னியாச தீட்ஷை பெற்றார்; நான்கு ஆண்டுகள் அவருடன் தங்கி, வேதாந்தத்தை கற்றுத்தேர்ந்தார். குருவின் வழிகாட்டுதலுடன், 12வது வயதில், வாரணாசி, பத்ரிநாத் சென்று பிரம்ம சூத்திரம், உபனிடதங்கள் மற்றும் பகவத்கீதை ஆகியவற்றுக்கு, ஆதிசங்கரர் உரை எழுதினார். ஆதி சங்கரரின் தெய்வீக பயணம், நர்மதை நதிக்கரையில் தான் துவங்கியது என்பதை நினைவுறுத்தும் வகையில், ஆதிசங்கரருக்கு நர்மதை நதிக்கரையில், 108 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு, ஆச்சார்ய சங்கரர் கலாச்சார ஒருமைப்பாட்டு அறக்கட்டளை (ஆசார்ய சங்கர ஸாம்ஸ்க்ருதிக ஏகதா ந்யாஸ) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளது. கடந்த, 2017 -18 ல் துவங்கிய இவ்வமைப்பு, சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் வழிகாட்டுதலுடன், சுவாமிகளையே புரவலராக ஏற்றுக்கொண்டு, இயங்கி வருகிறது. ஒருமைப்பாட்டின் சிலை என்ற அடையாளத்துடன், ஆதிசங்கருக்கு, 108 அடி உயரத்தில் பல்வகை உலோகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி சிவகுமார் பண்டிட் தலைமையிலான வேத விற்பன்னர்கள், அதற்கான பூஜைகளை செய்து வந்தனர். தொடர்ந்து இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர், சனாதனத்தை தழைத்தோங்க செய்த ஆதிசங்கரரின் சிலை திறக்கப்பட்டது. சிருங்கேரி ஸ்ரீமடம் சார்பில், முதன்மை தலைமை அதிகாரி கவுரிசங்கர் விழாவில் பங்கேற்றார். இன்றைய சிலை திறப்பு விழா, Acharya Shankar Saamskritik Ekta Nyaas என்ற யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar