Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைக்கோவிலில் சனி பிரதோஷம் கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சாரதா நவராத்திரி விழா! கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சாரதா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி நவராத்திரி விழா அக்.,16ல் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 அக்
2012
02:10

ஆண்டுதோறும் திருவிழா நடக்கும் கோயில்களில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. ஆவணி மாதத் திருவிழா முடிந்த நிலையில், அக்.,16 நவராத்திரி விழா துவங்குகிறது. இதற்காக, ரூ.15 லட்சம் செலவில், கொலு கண்காட்சிக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பகலிலும் இக்கண்காட்சியை காணலாம்.  கொலு மண்டபம், அம்மன் சன்னதி பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ளது. இச்சன்னதிக்கு செல்லும் வாயில் கோபுரத்தை கி.பி. 1227ல், வேம்பத்தூர் ஆனந்த தாண்டவநம்பி கட்டினார். இதனாலேயே இக்கோபுரம் வேம்பத்தூரர் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. வாயிலில் இருந்து, இடது புறம் பிரகாரத்தில் வலம் வந்தால், திருமலைநாயக்கர் தன் மனைவி யருடன் இருக்கும் சிலைகளை காணலாம். அருகிலேயே அவரது கட்டளை அறையும் உண்டு. சன்னதியின் ஆறுகால் பீடத்தில்தான், சித்திரை மாதத்தில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. நாயக்கர் மன்னர்கள், திருச்சியை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த சமயத்திலும், இந்த ஆறுகால் பீடத்தில்தான் செங்கோல் பெற்று ஆட்சிபுரிந்தனர்.

சன்னதி வாசலில், செப்பினாலான இருதுவாரபாலகர்கள் சிலைகள் உள்ளன. இவை திருமலை நாயக்கர் செய்து கொடுத்தது. சிலைகளின் பின் புறத்தில் சுவரில், மீனாட்சி பிள்ளைத்தமிழின் சில பாடல்கள் பொறிக்க பட்டுள்ளன. அம்மன் மகாமண்டபத்தில், முழுவதும் கல்லால் ஆன சிறுமணி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. பள்ளியறைக்கு கிழக்கே, இரண்டாம் பிரகாரத்திற்கு செல்ல, புதிய வாசல் திறக்க 1960-63 திருப்பணியின்போது முடிவு செய்யப்பட்டது. இதற்கு சிற்பிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால், அப்போதைய திருப்பணிக்குழுத் தலைவர் பி.டி.ராஜன், மீனாட்சி அம்மனிடம் அனுமதி கேட்க முடிவு செய்தார். பூக்கட்டி போட்டு பார்த்ததில், அம்மனின் சம்மதம் கிடைத்தது. இதன் பிறகே, அந்த வாசல் உருவாக்கப்பட்டது. அம்மனை தரிசித்துவிட்டு, இவ்வாசல் வழியாகத்தான், முக்குறுணி விநாயகரை தரிசிக்க செல்ல வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar