Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி; பெருமாளை தரிசனம் ... தென்திருப்பதியில் பிரமோற்சவ கருட சேவை தென்திருப்பதியில் பிரமோற்சவ கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காட்டில் உலகளாவிய பிராமண சங்கமம் நிகழ்ச்சி; வேத பாராயணத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பாலக்காட்டில் உலகளாவிய பிராமண சங்கமம் நிகழ்ச்சி; வேத பாராயணத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 செப்
2023
11:09

பாலக்காடு: பிராமண சமுதாய இளம் தலைமுறையினர் ஐ.டி., வேலைகளில் மட்டும் திருப்தி கொள்ளாமல் ஐ.ஏ.எஸ்., போன்ற ஆட்சிப்பணி துறைகளுக்கு அதிகளவில் வர வேண்டும் என பாலக்காட்டில் நடக்கும் உலகளாவிய பிராமண சங்கமம் துவக்க விழாவில் தெரிவிக்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு, ராமநாதபுரம் அருகேயுள்ள கலையரங்கில் கேரள பிராமண சபை சார்பில் மூன்று நாட்களுக்கு நடக்கும் உலகளாவிய பிராமண சங்கமம் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கல்பாத்தி வேத பாடசாலை மாணவர்களின் வேத பாராயணத்துடன், சங்கமம் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து கேரள பிராமண சபையின் துணைத்தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார். கேரள பிராமண சபையின் தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகித்து பேசியதாவது: தற்போதைய ஐ.டி., வேலைகளில் மட்டும் திருப்தி கொள்ளாமல், ஐ.ஏ.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் துறைகளுக்கு பிராமண சமுதாய இளம் தலைமுறையினர் அதிகளவில் வரவேண்டும். கேரளாவில் நாம் ஒற்றுமையாக இருந்தால், தேர்தலில், 60 தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவர்களாக இருக்க முடியும். அனைத்து கட்சியினரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை பண்பு தேவை: சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாகி கவுரிசங்கர், பிராமண சங்கமம் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கேரளாவில் பல்கலை: நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கல்யாண் சில்க்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பட்டாபிராமன் பேசுகையில், இந்தியாவுக்கே பெயர் வாங்கி தரும் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலை கழகம் போல், கேரளாவிலும் நாம் ஒரு பல்கலை கழகம் துவங்க வேண்டும். அதற்கு உதவியளிப்பவர்களில் முன்னிலையில் நானும் இருப்பேன், என்றார்.

கண்காட்சி துவக்கம்: பிராமண சங்கமத்தை முன்னிட்டு கண்காட்சியை, தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் துவக்கி வைத்தார். கர்நாடகா பிராமண மகா சபை அமைப்புச் செயலர் ரவிகுமார், தமிழ்நாடு பிராமண சமாஜம் தலைவர் ஹரிஹரமுத்து, யோகக்ஷேம சபை தலைவர் அக்கீராமன் காளிதாச பட்டதிரிபாடு, வங்கதேச பிராமின் சம்சாத் ஆலோசகர் அமியா முகர்ஜி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், கேரளா பிராமண சபை பொதுச்செயலர் சிவராமகிருஷ்ணன் பேசினர். தொடர்ந்து நவீன காலத்தில் வேத அறிவின் முக்கியத்துவம் குறித்த, விவாதமும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

சங்கமத்தில் இன்று, நாளை: பிராமண சங்கமம் நிகழ்ச்சியில் இன்று (23ம் தேதி) காலை 9:00 மணி முதல் இரவு 7:15 மணி வரை புதுமை, பொருளாதார வளர்ச்சி நிலைத்தன்மை, வேத கல்வி வாயிலாக இலக்குகள் அடையுங்கள், வேத பாரம்பரியத்தின் வாயிலாக உலக நாகரிகம் சுய ஞானம் வாயிலாக பெண்களுக்கு அதிகாரம், மனிதனை உருவாக்கும் திறன்களை குறித்து விவாதம் நடக்கிறது. நாளை (24ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை தொழில் முனைவு குறித்த இளைஞர்களுக்கான சிறப்பு அமர்வுகள் நடக்கின்றன. சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை, மத்திய அமைச்சர் வி.கே.சிங் துவக்கி வைக்க உள்ளார். சிறப்பு விருந்தினராக டி.வி.எஸ்., கேபிடல் பண்ட்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் ஸ்ரீனிவாசன் பங்கேற்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷம். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
பெரியகுளம்; வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடப்பதற்கு மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
திருத்தல வரலாறு; இத்திருக்கோவில் சிறந்ததொரு புராண தலமாகும். பிரமாண்ட புராணத்தில் இக்கோவிலைப் பற்றி ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு 108 சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar