Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி ஏகாதசி; கரி வரதராஜ ... ஓம் சரவண பவ.. இன்று புரட்டாசி செவ்வாய்; கந்தனை வணங்கினால் கவலைகள் தீரும் ஓம் சரவண பவ.. இன்று புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13ம் நுாற்றாண்டை சேர்ந்த 3 கற்சிலைகள் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2023
06:09

கிருஷ்ணகிரி: அத்திமுகம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட, 13ம் நுாற்றாண்டை சேர்ந்த, 3 கற்சிலைகள், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள அத்திமுகம் கிராமத்தில், கிருஷ்ணன் என்பவர் வீடு கட்ட பள்ளம் தோண்டினார். அப்போது, 2.7 அடி உயர பைரவர் சிலை, 2.4 அடி உயர சண்டிகேஸ்வரர் சிலை மற்றும் 3 அடி உயர துர்கை சிலை கண்டெடுக்கப்பட்டன. இதை மீட்ட சூளகிரி தாசில்தார் சக்திவேல், மாவட்ட கலெக்டர் சரயுவின் ஒப்புதலோடு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இது குறித்து, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இம்மூன்று கற்சிற்பங்களும், 13ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. ஆங்காங்கே லேசாக சேதமடைந்து இருந்தாலும், மிகுந்த கலை அழகுடன் உள்ளன. பைரவர் பின்னால் நாயும், பின் கைகளில் உடுக்கை, பாசக்கயிறு உள்ளன. முன் கைகளில் சூலம், பிச்சைப்பாத்திரம் உள்ளன. சண்டிகேஸ்வரர் சிற்பம், சுகாசன அமர்வில், வலது கையில் கோடாரி, இடது கையை கடக முத்திரையாக வைத்துள்ளார். துர்க்கை அம்மன் சிற்பம் எருமை தலைமீது நேராய் நின்றவாறு, பின் கைகளில் சங்கும், சக்கரம், முன் கைகளில் வலது கை அபய முத்திரை, இடது கையை தொடை மீது வைத்துள்ளார். இம்மாவட்டத்தின் பிற்கால சோழர்களின் கலைக்கு, இச்சிற்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு, அவர் கூறினார். வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் உடனிருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா ஆராதனை விழா நடந்தது. உடுமலை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வாமலை வில்வத்ரிநாதர் கோவில் நிறமாலை உற்சவத்தை ஒட்டி செண்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar