மழை வேண்டி மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 12:10
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக கோயிலின் முன்பு மழை வேண்டி யாக வேள்விகள் நடத்தப்பட்டு மூலவருக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு கூழ், மற்றும் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டன.