Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் தென்னந்தோப்பில் ஐம்பொன் ... வள்ளலாரின் அவதார தின விழா; ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் வள்ளலாரின் அவதார தின விழா; ஏழு திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சொத்துக்களை பொது ஏலத்துக்கு கொண்டு வராதது ஏன்?; ஐகோர்ட் கேள்வி
எழுத்தின் அளவு:
கோவில் சொத்துக்களை பொது ஏலத்துக்கு கொண்டு வராதது ஏன்?; ஐகோர்ட் கேள்வி

பதிவு செய்த நாள்

06 அக்
2023
12:10

துாத்துக்குடி ; கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எத்தகைய நிபந்தனை அடிப்படையில் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்டன; ஏன் பொது ஏலத்திற்கு கொண்டுவரவில்லை என்பதற்கு அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கழுகுமலை வெள்ளதுரை தாக்கல் செய்த மனு: கழுகுமலையில் உள்ள பழமையான கழுகாசலமூர்த்தி கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக, 292 ஏக்கர் நிலம், கட்டடங்கள் உள்ளன. இவற்றை கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை முறையாக பராமரிப்பதில்லை. பொது ஏலம் நடத்தாமல், விதிகளை பின்பற்றாமல் சிலரது பயன்பாட்டிற்காக சொத்துக்கள் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சில தனிப்பட்ட நபர்கள் பயனடைகின்றனர்; குறைந்த வாடகை வசூலிக்கப்படுகிறது. கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை வெளியேற்ற நடவடிக்கை இல்லை. துாத்துக்குடி ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர், கோவிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறையின் அனுமதியின்றி அனுபவிக்கும் நபர்களை குத்தகைதாரர்களாக ஏற்றுக் கொண்டு, வாடகை வசூலிக்கப்படுகிறது. இவர்களை குத்தகைதாரர்களாக வரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் குறிப்பிட்ட பட்டா எண்ணில் குத்தகைதாரர்கள் உள்ளனர். இச்சொத்திற்கு பொது ஏலம் நடத்த சாத்தியக்கூறுகள் இல்லை என, உத்தரவிட்டுள்ளார். இது, ஆக்கிரமிப்பாளர்களை வரன்முறைப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணை கமிஷனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். குத்தகைதாரர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.பொது ஏலம் நடத்தி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு வெள்ளதுரை குறிப்பிட்டார். நீதிபதி பி.புகழேந்தி: இணை கமிஷனரின் உத்தரவிற்கு இடைக் காலத் தடை விதிக்கப் படுகிறது. சொத்துக்களை குத்தகைக்கு அனுமதிக்க குழு அமைக்கப்பட்டதா, எத்தகைய நிபந்தனைகள் அடிப்படையில் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்டது, ஏன் பொது ஏலத்திற்கு கொண்டுவரவில்லை. குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் தற்போது யார், யாரிடம் உள்ளன, அதனால் கிடைத்த வருவாய் எவ்வளவு விபரத்தை அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கழுகாசலமூர்த்தி கோவில் செயல் அலுவலர் அறிக்கையாக அக்., 18ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar