Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் வரும் ... முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா முத்துமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு அசைவ படையல்; மண் சட்டிகளில் எடுத்து சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு அசைவ படையல்; மண் சட்டிகளில் எடுத்து சென்ற பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 அக்
2023
03:10

மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் எல்லை தெய்வத்திற்கு புது மண் சட்டிகளில் அசைவ படையல்களை ஊர்வலமாக தீப்பந்தம் ஏற்றி கொண்டு சென்று படைத்து வழிபட்டனர்.

மானாமதுரை அண்ணாத்துரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் புரட்டாசி மாதம் செவ்வாய் சாற்றுதல் விழாவை கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டிற்கான விழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியதையடுத்து கிராம மக்கள் விரதமிருந்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு செவ்வாய் சாற்றுதல் விழாவை முன்னிட்டு தேங்காய்,பழம், வெற்றிலை, பாக்கு,பணியாரம்,கொலுக்கட்டை, கறிச்சோறு ,நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுகறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து புது மண் சட்டிகளில் வைத்து தீப்பந்த விளக்குகளை ஏற்றி கிருஷ்ணராஜபுரம் மக்கள் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள குறத்தி அம்மன் கோவிலிலிருந்து கிளம்பி நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக எல்லை பிடாரியம்மன் கோவிலுக்கு வந்து அங்கு அம்மனுக்கு படையலை வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து மக்கள் கொண்டு வந்திருந்த அசைவ உணவுகளை தங்களது உறவினர்களோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar