Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோயிலில் ... பழநி நவராத்திரி விழாவில் தங்கரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயிலில் ராஜகோபுர முகப்பு மண்டப திருப்பணிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2023
04:10

தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தின் கீழ் உள்ள முகப்பு மண்டபம், திருப்பணி மண்டபத்தில் பழமையும் தொன்மையும் மாறாமல் புனரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஷிவ் நாடாரின் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சார்பில் 200 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகளும் கும்பாபிஷேக திருப்பணிகளும் நடக்கிறது. கோயில் ராஜகோபுரத்தில் கீழ் பகுதியில் உள்ள திருப்பணி மண்டபம் | முகப்பு மண்டபம் திருக்கல்யாண மண்டபம் ஆகியவற்றின் பழமையும் தொன்மையும் மாறாமல் புனரமைப்பு பணிகள் தற்போது 16.60 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. ராஜகோபுரத்தில் சிதிலமடைந்த சிலைகள் சீரமைக்கப்படுகின்றன. திருப்பணி மண்டபம் மற்றும் முகப்பு மண்டபத்தில் சிறையில் ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த கடப்பாக்கல் மற்றும் கோட்டா கற்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக கருங்கற்கள் பதிக்கப்படுகின்றன. திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் கண்காணிப்பில் பணிகள் நடக்கிறது. ராஜகோபுரம் எதிரே முகப்பு மண்டபம் திருப்பணி மண்டபங்களில் கருங்கற்களுக்கு பதிலாக டைல்ஸ் பதிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகார்கள் வந்தன. ஆனால் கோவில் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar