Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: ... மழை வர வேண்டி தவளைக்கு திருமணம்: வினோத வழிபாடு மழை வர வேண்டி தவளைக்கு திருமணம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகின் 2வது பெரிய ஹிந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு; 10,000 சிலைகளுடன் பிரமாண்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகின் 2வது பெரிய ஹிந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு; 10,000 சிலைகளுடன் பிரமாண்டம்

பதிவு செய்த நாள்

12 அக்
2023
11:10

வாஷிங்டன், இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்ட பிரமாண்டமான ஹிந்து கோவில், அமெரிக்காவில் திறக்கப்பட்டது. புதுடில்லியில் அக்ஷர்தாம் அமைப்புக்கு சொந்தமான ஸ்ரீசுவாமி நாராயண் கோவில் நிர்வாகத்தினர், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்திலும் இதேபோன்ற பிரமாண்ட கோவிலை கட்டி வந்தனர். ராபின்ஸ்வில்லே பகுதியில், 183 ஏக்கரில், 12 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த கோவில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு முறைப்படி திறக்கப்பட்டது. மஹராஜ் சுவாமிகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க, விழா வெகுவிமரிசையாக நடந்தது. வேத முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலில், 10,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்திய கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் இசைக்கருவிகளும், சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. கோவிலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நீள்வட்ட குவிமாடம், பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். கருவறையுடன் கூடிய பிரதானமண்டபம், 12 துணை கோவில்கள், ஒன்பது கோபுரங்கள், பிரமிடு வடிவிலான ஒன்பது கோபுரங்களுடன் பிரமாண் டமாக அழகிய வேலைபாடுகளுடன் இந்தக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கோடை வெயில், மழை, குளிர் உட்பட எந்த கால நிலையையும் தாங்கும் வகையில், உலகத்தரம்  வாய்ந்த கிரானைட் மற்றும் பளிங்குக்கற்கள் கோவிலில் பதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு பகுதி இருந்து வந்த, 12,500 தன்னார்வலர்கள், பணிகளில் ஈடுபட்டனர். இக்கோயிலில் அக்.,18ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar