Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடைக்கலம் காத்த அம்மன் கோயில் ... சீரடி சாய்பாபா கோவிலில் ஆரத்தி பூஜை சீரடி சாய்பாபா கோவிலில் ஆரத்தி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு டோக்கன் கொடுத்து அன்னதானம் : முறைகேடு தடுக்கப்படுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு டோக்கன் கொடுத்து அன்னதானம் : முறைகேடு தடுக்கப்படுமா?

பதிவு செய்த நாள்

12 அக்
2023
05:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு டோக்கன் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் முறைகேடு தடுக்க முடியுமா என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம், பழனி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல முக்கிய கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச., 31 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பல கோயில்களில் முறைகேடு அதாவது சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் கூடுதலாக காட்டி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனை தடுக்க அக்.,7 முதல் ராமேஸ்வரம் கோயிலில் சாப்பிட வரிசையில் வரும் பக்தர்களுக்கு கணினி மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் அனைத்து கோயிலிலும் அமல்படுத்தி உள்ளதால், முறைகேட்டை தடுக்க முடியும் என அரசு கருதுகிறது. ஆனால் இதிலும் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வி.எச்.பி., தலைவர் ஆ. சரவணன் கூறுகையில் : ராமேஸ்வரம் கோயிலில் இத்திட்டம் துவக்கிய நாள் முதல் அதிகாரிகள் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில், தற்போது கணினி மூலம் டோக்கன் வழங்குவதால் முறைகேட்டை தடுக்க முடியுமா என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். தற்போது பக்தர்கள் கொண்டு வரும் கணினி டோக்கனை மட்டுமே மற்றொரு இடத்தில் கோயில் ஊழியர் ஸ்கேன் செய்வதால், இதிலும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. எனவே டோக்கன் வழங்குவதுடன் பக்தர்களின் விரல் ரேகையும் பதிவு செய்ய பயோமெட்ரிக் இயந்திரம் பொருத்தினால், முறைகேடு தடுக்க முடியும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar