Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ... 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்தரை அடி உயர குகநாதீஸ்வரருக்கு சிறப்பு பூஜை 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்தரை அடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்குநேரி பெருமாள் கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நான்குநேரி பெருமாள் கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம்

பதிவு செய்த நாள்

13 அக்
2023
01:10

நான்குநேரி; நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதும் ஆகும். இங்கு நித்திய எண்ணெய் காப்பு நடப்பது கோயிலின் தனி சிறப்பு ஆகும். இதனை தொடர்ந்து நேற்று நான்குநேரி மடத்தின் 31வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசியுடன் வானமாமலை பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நடந்தது. இதில் காலையில் விஸ்வ ரூப தரிசனத்தை தொடர்ந்து ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு தீர்த்த, ஜடாரி, பிரசாத வினியோகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை சுமார் 4.30 மணிக்கு வானமாமலை பெருமாள் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சொற்பொழிவு, நாதஸ்வர இசை கச்சேரி மற்றும் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடந்தது. இரவு வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயார், ஆண்டாள் வாகனத்தில் எழுந்தருளிய பின்பு வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar