Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்தரை அடி ... குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஐப்பசி விசு தேரோட்டம் கோலாகலம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி; திருவாவடுதுறை ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி; திருவாவடுதுறை ஆதீனம் வழிபாடு

பதிவு செய்த நாள்

13 அக்
2023
01:10

மயிலாடுதுறை; மாயூரநாதர் கோயிலில் இன்று நடந்த மண்டலாபிஷேக பூர்த்தி விழாவில், திருவாவடுதுறை ஆதின குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான தேவார பாடல் பெற்ற மாயூரநாதர் கோயில் உள்ளது. இத்தலத்தில் பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. சிறப்புமிக்க இக்கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த செப்.3ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு யாகம் செய்யப்பட்டு, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 1008 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கலெக்டர் மகாபாரதி, ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனக் கண்காணிப்பாளர் சண்முகம், திருவிடைமருதூர் கோயில் நிர்வாகி ஸ்ரீராம்  மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar