Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் மலை மேல் ... கொலு பார்க்க மட்டுமல்ல.. படிப்பினை பெறவும் தான்; நாளை கொலு வைக்க நல்ல நேரம் காலை 7:31– 9:00 மணி கொலு பார்க்க மட்டுமல்ல.. படிப்பினை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதன பாரம்பரிய தர்மம் நிலைத்து நிற்கும்.. நல்லதே நடக்கும் ; ரவிசங்கர் பேச்சு
எழுத்தின் அளவு:
சனாதன பாரம்பரிய தர்மம் நிலைத்து நிற்கும்.. நல்லதே நடக்கும் ; ரவிசங்கர் பேச்சு

பதிவு செய்த நாள்

13 அக்
2023
04:10

குன்னூர்: "பக்தி, ஞானம், பொது சேவைக்காக உழைத்தால் நமது சனாதன பாரம்பரிய தர்மம் நிலைத்து நிற்கும் என வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் உள்ள சித்தகிரி சாய் தர்ம க்ஷேத்ராவில் சரண் நவராத்திரி மகா விழா இன்று துவங்கியது. விழாவை துவக்கி வைத்த, வாழும் கலை அமைப்பு நிறுவனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேசியதாவது: நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக இங்குள்ள மக்களின் அன்பிற்காக என்னை இங்கு இழுத்து வரப்பட்டுள்ளது. சித்தகிரி தர்ம க்ஷேத்ராவில் மாதாயினி அம்மாவின் தியானம், இங்கு செய்யும் பொது சேவை மிகவும் சிறந்தது. அன்பும், ஆவலும் இருக்கும் இடத்தில், தைரிய சக்தி தானாகவே வந்துவிடும்.

பஞ்சபூதங்களுக்கு ஆட்சி : நிர்த்தம், சங்கீதம் நடக்கும் போது, ஒரு சிறிய நிகழ்வு நடந்தது. ஆனால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது. இதே போல உலகத்திற்கு வந்துள்ள மிகப்பெரிய கஷ்டத்தின் சிறிய நிகழ்ச்சியாக வெளிப்பாடு தான். யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. பஞ்ச பூதங்களுக்கும் ஆட்சியாக இருக்கும் அதிபதி அம்மா. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாசம் என அனைத்திலும் ஆத்ம பொருளாக இருப்பது சிவ தத்துவம். அந்த சிவ தத்துவமும் சக்தி இல்லாமல் கிடையவே கிடையாது. சிவ தத்துவம் இருப்பதால் எல்லாம் நல்லதே நடக்கும். ஒவ்வொருவரின் மனதில் தைரியமும், விசுவாசமும், நம்பிக்கையும் வைத்து கொள்ள வேண்டும்.

சனாதன பாரம்பரிய தர்மம் : சித்தகிரியில், பக்தி, ஞானம், பொது சேவை நடத்தி வருவது சிறப்பு. நாம் அனைவரும் பக்தி, ஞானம், பொது சேவைக்காக உழைக்க நமது சனாதன பாரம்பரிய தர்மம் நிலைத்து நிற்கும். எங்கு தர்மம் உள்ளதோ அங்கு ஜெயம் நிச்சயம் கிடைக்கும். நாம் தர்மம் செய்தால் தர்மம் நம்மை இரட்சிக்கும்.

இளைஞர்களுக்கு அழைப்பு : மருத்துவமனை, கல்வி என ஜன சேவை செய்வதே ஜனார்த்தன சேவை. மக்களுக்கு சேவை செய்வது மிகப் பெரிய பாக்கியம். இந்த பாக்கியத்தை நீங்கள் பெற்றுக் கொண்டு வருகிறீர்கள். கிராமத்து முக்கியஸ்தர்கள், இளைஞர்களை இந்த வழியில் அழைத்து வர ஊக்குவிக்க வேண்டும்.

எல்லாம் அன்பு மயம் :எல்லா இடத்திலும் இருக்கக்கூடியது அம்மாவின் சக்தி. அம்மாவிடம் பயம் வேண்டாம்; பக்தி மட்டும் போதும். பயம், பக்தி இரண்டும் வேண்டும் என்கிறோம். பயமிருக்கும் போது பக்தி இருக்காது. பக்தி இருக்கும் போது பயம் இருக்காது. நாம் அன்பே சிவம் என்று நாம் கூறி வருகிறோம். அன்பு வளர்க்க வேண்டும். உள்ளததில் அன்பு கண்டுகொண்டால் அதுவே தியானம். எல்லாம் அன்புமயம், சக்திமயம், சிவமயம் என்பதை மனதில் உறுதியாக நினைத்து, நம்பிக்கை வைத்து சென்றால் எல்லாம் நன்மையே நடக்கும். இவ்வாறு சிவசங்கர் பேசினார். விழாவில், நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் மகளிரின் லலிதா சகஸ்ரநாம தசக்கோடி அர்ச்சனை நடந்தது. லலிதா தேவியின் லலிதா சகஸ்ரநாம பாராயணம், கலைமாமணி டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் சங்கீத கச்சேரி இடம் பெற்றது. கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா நடனங்களை ஒருங்கிணைத்து மகிஷாசுர வதம் நடனம் இடம்பெற்றது. 24ம் தேதி வரை நடக்கும் நவராத்திரி விழாவில் சாக்த வித்யா ஷண்மதா பூஜை, சண்டி யக்ஞம், மகா சணடி யாகம், மகா சண்டி பாராயணம் உட்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. விழாவில் கோரக்நாத் சத்குரு மகாராஜ் பூஜ்ய ஸ்ரீ சித்த மகாராஜ், சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமி, தேஜஸ்வானந்தா, பரமபூக்ய சித்தலிங்க மகா ஸ்வாமி, ஜகத்குரு வித்ய நாராயணா தீர்த்த மகா சுவாமி, சாந்தலிங்கம் மருதாச்சல அடிகளார், குமரகுருபர சுவாமி, காமாட்சி தாசர் சுவாமி உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். ஏற்பாடுகளை சித்தகிரி தர்மர் சேத்ரா மாதாயினி, தர்ம க்ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகிகள், பக்தர்கள செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar