Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறிவியலும் ஆன்மீகமும்; தசரா ... மகாவிஷ்ணு கோவிலில் பூ புத்தரி அறுவடை திருவிழா; நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை மகாவிஷ்ணு கோவிலில் பூ புத்தரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயக்குரவர்களால் பாடல்பெற்ற ஓம்காளீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சமயக்குரவர்களால் பாடல்பெற்ற ஓம்காளீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 அக்
2023
01:10

மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல்பெற்ற சிறப்புக்குரிய, காளிதேவி வழிபட்ட பழமை வாய்ந்த தலமான ஓம்காளீஸ்வரர் கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயகுரவர்கள் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலமான ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர் கோயில் உள்ளது. காளிதேவி குத்தாலத்தில் சிவனை வேண்டி கோயில் அமைத்து நீண்ட காலம் வழிபாடு நடத்தியதன் பலனாக, மான், மழு தரித்து, சிவ கணங்களோடு சிவபெருமான் அங்கு தோன்றி காளி தேவியோடு திரு நடனம் புரிந்ததாக வரலாறு கூறுகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையடன் தொடங்கி ஆறு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாள வாத்தியங்கள், சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் சுவாமி பங்குனி மாதத்தில் திண்டுக்கல் நகரில் பல்வேறு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; பங்குனி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நரசிம்மர் கோவில் பங்குனி தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் இன்று கோரதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar