Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணம்; பாளை முகசந்தி ... சந்திர கிரகணத்தில் திருநள்ளாறு கோயில் நடை அடைப்பு இல்லை; பக்தர்கள் தரிசனம் செய்யலாம் சந்திர கிரகணத்தில் திருநள்ளாறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு 2500 கிலோ சாதத்தால் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு 2500 கிலோ சாதத்தால் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 அக்
2023
11:10

பெரம்பலூர்; கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு 2500 கிலோ சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. மாமன்னன் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து அங்கு வெற்றி பெற்றதன் அடையாளமாக இந்த பகுதியில் கங்கைகொண்ட சோழபுரம் என்னும் மாநகரை உருவாக்கி,  கட்டிடக்கலைக்கு சான்றாக, தமிழர்களின் பாரம்பரியத்தை, அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக வானுயர்ந்த பிரகதீஸ்வரர் கோவிலை கட்டி அழகு படுத்தினார். இந்த கோவிலானது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் உடையை இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேக விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்றைய தினம் 39- வது  அன்னாபிஷேக விழாவானது கடந்த 26-ம் தேதி கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று பிரகதீஸ்வரர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று முக்கிய நிகழ்வான இன்றைய தினம் ஆசியாவிலேயே மிகப் பெரிய லிங்கமாக கருதக் கூடிய பிரகதீஸ்வரர் சுவாமிக்கு 100 மூட்டை சாதம் வடிக்கபட்டு, அதாவது 2500 கிலோ சாதம் மற்றும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்து சாத்தப்படும். இன்றைய தினம் இரவு சந்திர கிரகணம் வருவதால், அதற்கு முன்பாகவே அதாவது சரியாக 5 மணியளவில் மஹா தீபாராதனை காட்டப்படுகிறது. இங்கு லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு அரிசிகளும், ஒவ்வொரு லிங்கமாக கருதப்படுவதால், அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்கள் கோடி புண்ணியம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து சுவாமிக்கு படைக்கப்பட்ட அன்னம் கலைக்கபட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள சாதங்கள் கிராமம் முழுவதும் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்து, ஏரி, குளங்களில் உள்ள மீன்களுக்கும் உணவாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, தற்போது சாதம் வடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 5 நீராவி எந்திரங்களை கொண்டு சாதம் வடிக்கும் பணிகளை காஞ்சி சங்கரமட ஊழியர்கள் செய்து வருகின்றனர். முதற்கட்டமாக மேளதாளத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று லிங்கத்தின் மீது அன்னம்  சாத்தப்பட்டு வருகிறது. விழாவையொட்டி பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் வருவதால் அன்னாபிஷேக விழாவானது தற்போது களை கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar