Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மழை வேண்டி ஒப்பாரி வைத்து வழிபாடு ரத்தினகிரி முருகன் அறுகோண தெப்பக்குளத்தில் பக்தர்கள் ஆரத்தி வழிபாடு ரத்தினகிரி முருகன் அறுகோண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

31 அக்
2023
06:10

நாமக்கல்; நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், நாளை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. பாதுகாப்பு பணியில், 105 ‘சிசிடிவி’ கேமராக்கள், 700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை சாலையில், நரசிம்மர், நாமகிரித்தாயார் கோவில் எதிரே, ஒரே கல்லில் உருவான, 18 அடி உயர சிலையுடன் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, நின்ற நிலையில் வணங்கியபடி, சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர். இக்கோவிலில், 1996 மற்றும் 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம்,  64.60 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன. இதையடுத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று காலை, 8:00 மணிக்கு, மகாசாந்தி மற்றும் அதிவாச ஹோமம், தமிழ் ப்ரபந்த் சமர்பணம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை காலை, 9:10 மணிக்கு, யாத்ராதானம், கும்பப்ரயாணம், 10:00 மணிக்கு, திருக்குட நன்னீராட்டு பெருவிழா, மகா சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடக்கிறது.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில், நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த, 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 105 ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகை, செல்வா சீராளன், ரமேஷ் பாபு, அறநிலைய துறை உதவி கமிஷனர் இளையராஜா, கண்கணிப்பாளர் அம்சா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar