இருக்கன்குடி கோயில் உண்டியல் ஒரு மாதத்தில் ரூ.19 லட்சம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2012 10:10
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக, ஒரு மாதத்தில் 19 லட்சம் ரூபாய் மற்றும் 78 கிராம் தங்கம் கிடைத்தது. கோயில் உண்டியல்கள் மாதம் தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை 9 மணிக்கு, பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, கோயில் செயல் அலுவலர் தனபாலன், விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் கவிதாபிரியதர்ஷினி முன்னிலையில், உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோயில் அலுவலர்கள், கிராம மக்கள் காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒரு மாத காணிக்கையாக, 19 லட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய், 78 கிராம் தங்கம், 62 கிராம்வெள்ளி கிடைத்துள்ளது.