Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் பகுதி கோவில்களில் அமாவாசை ... இன்று சஷ்டி விரதம் 2ம் நாள், கோவர்த்தன விரதம்; கந்தா என்றாலே கவலைகள் தீரும்! இன்று சஷ்டி விரதம் 2ம் நாள், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி அமாவாசை தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி அமாவாசை தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

13 நவ
2023
06:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. சிவாலயங்களில் இருந்து காவிரியின் இரண்டு கரைகளிலும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கொட்டும் மழையில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்று புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொண்டதாக புராணம் கூறுகிறது. இதனால் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரிதுலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. மயில் உருவில் சிவனை பூஜித்து சாபவிமோசனம்  அடைந்த மாயூரநாதர் ஆலயம் மற்றும் வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்ச்சவம் நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் கங்கைக்கு மாயூரநாதர் சுவாமிகளும், மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சியளித்தாக வரலாறு கூறுகிறது.   இதனை முன்னிட்டு இன்’று அமாவாசை தீர்த்தவாரி  மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம். இன்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அயபாம்பிகை சமேத மாயூநாதர் சுவாமி,  அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குள காசிவிஸ்வநாதர், ஐப்பசிமாத அமாவாசையொட்டி வதானேஸ்வரர் கோயிலில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினார்.. பின்னர் அஸ்திரதேவருக்கு இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஆதீனங்களின் கடட்டளை தம்பிரான்’கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி (துலா) மாதஅமாவாசை அன்று ஒருநாள் மட்டும் வீதியுலாவாக காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar