Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் ... மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தகடு பதித்த கொடி மரம்! மதுரை மீனாட்சி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடியும் நிலையில் பெரியமாரியம்மன் கோவில் சுவர்: சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2012
10:10

ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் சுற்றுச்சுவர் இடியும் நிலையில் இருப்பதால், அதனை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் பெரிய மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாங்கல்யம் காக்கும் மாரியம்மன் என்ற சிறப்பு பெயரும், இம்மாரியம்மனுக்கு உண்டு. பங்குனி மாதத்திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பர். மாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக, பல்வேறு அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலின், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி, இடியும் நிலையில் உள்ளது.சி.எஸ்.ஐ., மைதானத்தில் வளர்க்கப்படும் ஆலமரத்தால் இடியும் நிலைக்கு தள்ளப்பட்ட சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: ஈரோடு சி.எஸ்.ஐ.,பள்ளி மைதானத்தில் வளர்க்கப்படும், ராட்சத ஆலமரத்தின் வேர், பெரியமாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரிலும் வளர்ந்ததால், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடியும் நிலையில் உள்ளது. சி.எஸ்.ஐ., பள்ளியையொட்டி, சுற்றுச்சுவர் உள்ளதால், இடிந்த சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.பெரிய மாரியம்மன் கோவிலில், மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. தற்போதே, இடியும் நிலையில் உள்ள மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.அதிகாரி கூறுகையில், ""பெரிய மாரியம்மன் கோவிலில், விழும் நிலையில் உள்ள சுவரை சீரமைக்க, உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சீரமைப்பதில் உள்ள சிக்கல் குறித்தும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், சுற்றுச்சுவர் சீரமைக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்புடையதாகும். ஆணும் பெண்ணும் சமம் எனும் ... மேலும்
 
temple news
சென்னை : வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தரப்பிரதேசம்: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திண்டுக்கல் அபிராமி உடனுறை பத்மகிரீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசியில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் லிங்கேஸ்வரர் கோவிலில் உள் பிரகாரத்தில் மழை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar