திருமலைக்கேணியில் கந்த சஷ்டி விழா; சிவபூஜை செய்த முருகப்பெருமான்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2023 05:11
நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி கந்த சஷ்டி விழாவில் 2ம் நாளான இன்று சிவபூஜை திருக்காட்சியில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயில் கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 2ம் நாளான இன்று மூலவருக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாரதனைகள் நடந்தது. தொடர்ந்து முருகன் சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போல் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிவபூஜை திருக்காட்சியில், முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவிலை சுற்றிவர வீதி உலா நடந்தது. பூஜைகளை சதாசிவ குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை கந்த சஷ்டி விழாவில் சிவ உபதேச திருக்காட்சியும், விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் நவ.18ல் சூரசம்ஹாரம் நடக்கும். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறக்காவலர் அழகுலிங்கம் உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.