Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஸ்கான் கோவிலில் கோவர்தன பூஜை திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் விமரிசை திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் கந்தசஷ்டி: தங்க சப்பரத்தில் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் கந்தசஷ்டி: தங்க சப்பரத்தில் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

15 நவ
2023
12:11

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா இரண்டாம் நாளான நேற்று, சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்து அருள்பாலித்தார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் அதைத்தொடர்ந்து காலபூஜைகள் நடந்தன. பின், ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் உச்சிக்கால தீபாராதனை முடிந்தவுடன் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி – தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல் பாட சண்முகவிலாசம் மண்டபத்துக்கு வந்தடைந்தார். மாலை , திருவாவடுதுறை ஆதீன சஷ்டிமண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்து வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


கந்த சஷ்டி மூன்றாம் நாளான இன்று அதிகாலை 3: 00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் காலபூஜைகள் நடைபெற்றது. வரும்18ம் தேதி மாலை 4:00 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar