Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி ... திருச்செந்தூர் கடற்கரையில் மணலில் சிவலிங்கம் செய்து வழிபாடு திருச்செந்தூர் கடற்கரையில் மணலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் துலா உற்சவ தேரோட்டம்; கொட்டும் மழையில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் துலா உற்சவ தேரோட்டம்; கொட்டும் மழையில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

15 நவ
2023
03:11

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் சுவாமி கோயிலில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கடந்த மாதம் 18ம் தேதி ஐப்பசி முதல் நாள் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. இதில் முக்கிய விழாவாக கடந்த 7ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் 10 நாள் உற்சவம் தொடங்கியது. அதில் முக்கிய நிகழ்வாக 13ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், இரவு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து திருத்தேர்ரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்ததை அடுத்து விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், அபயாம்பிகை சமேத மாயூரநாதர் ஆகிய சுவாமிகள் மூன்று தனித்தனி தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு குருமகா சன்னிதானம் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திருவாவடுதுறை ஆதீன தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் சிவ ஆகம வேத பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், தொழிலதிபர் விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன், நகராட்சி தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் சதீஷ்குமார், உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர் தெற்கு வீதிக்கு சென்றபோது மீண்டும் பலத்த மழை தொடங்கினாலும் பக்தர்கள் பரவசத்துடன் கொட்டும் மழையில் நனைந்தபடி வடம்பிடித்து இழுக்க, நான்கு வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar