அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா; பணிகள் தீவிரம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2023 06:11
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி பூஜை பொருட்கள் பாலீஷ் போடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், வீதி உலா செல்லும் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்படும் மண்டபத்தில் வண்ண வண்ண தோரணங்களைக் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் மூன்றாம் பிரகாரத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தங்கும் விடுதி, ஹோட்டல் உரிமையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எஸ்.பி., கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.