கோவை சாரதாம்பாள் கோவிலில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2023 12:11
கோவை: கோவை, ரேஸ்கோர்ஸிலுள்ள சாரதாம்பாள் கோவிலில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் தீபோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றது. நேற்று சாரதாம்பாள் கோவிலில், சாரதாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், ஆதிசங்கரர் சன்னிநிதிகளில் மங்கள இசை முழங்க தீபம் ஏற்றப்பட்டது. கோவில் மகாமண்டபத்திலும் தீபங்கள் ஏற்றப்பட்டன. கோவிலே, தீப ஒளியில் ஜொலித்தது. சாரதாம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.