Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொப்பார சேவையில் வீரராகவ பெருமாள்! அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் 21ல் தாயார் திருவடி சேவை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 அக்
2012
10:10

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில், முக்கிய நிகழ்ச்சியான தாயார் திருவடி சேவை வரும், 21ம் தேதி நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், தாயார் சன்னதியில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெகு விமரிசையுடன் நடக்கும். ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவில், தாயார் புறப்பாடாகி கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த, 15ம் தேதி துவங்கி, கோலாகலமாக நடந்து வருகின்றது. தாயார் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, இரவு, 7.30 மணிக்கு கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். பிறகு இரவு, 9.45க்கு கொலு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, இரவு, 10 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருவடி சேவை வரும், 21ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் ஸ்ரீதாயார் கொலு மண்டபத்தில் பாதங்கள் தெரிய எழுந்தருளி இருப்பார். மேற்கண்ட திருவடியை பக்தர்கள் சேவித்தால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். செல்வ வளம்பெருகும் என்பது ஐதீகம். இதனால் தாயார் திருவடிசேவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள். இதைத்தொடர்ந்து வரும். 24ம் தேதி விஜயதசமியன்று ரெங்கநாதர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு, சிங்கப்பெருமாள் கோவிலை அடைகிறார். அங்கு வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar