Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் நாளை வனபோஜனம்; ... அன்னூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 14 ம் தேதி நடத்த அனுமதி அன்னூர் பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனத்தில் ஞானபீடாரோகண விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனத்தில் ஞானபீடாரோகண விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 டிச
2023
03:12

மயிலாடுதுறை ; தருமபுரம் ஆதீனம் திருமடத்தில் 27 வது குருமஹா சன்னிதானம்  ஞானபீடாரோகண  விழா கோலாகலமாக நடைபெற்றது.
 
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாட்சி செய்துவருகிறார். குருமகா சன்னிதானம் ஞானபீடம் அமர்ந்த நாளையொட்டி ஞானபுரீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமம். நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், ஆயுஷ் ஹோமம் ஆகியவை நடந்தது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம்  முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் பூர்ணாஹூதியாகி கடங்கள் புறப்பட்டு ஞானபுரீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஆயுஷ் ஹோமம் நிறைவடைந்து கடங்கள் புறப்பட்டு குருமகா சன்னிதானத்திற்கு மகாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 27வது குருமகா சன்னிதானம் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், துர்க்கை அம்மன் கோயிலில்களில் வழிபாடு நடத்தினார். பின்னர் சொக்கநாதனர் பூஜை மடத்தில் வழிபாடு செய்த பின்பு ஆதீனத்தில் உள்ள ஞானபீடத்தில் அமர்ந்தார். அவருக்கு திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள் மகா தீபாராதனை செய்து வழிபட்டார். ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள 28 கோயில்களில் இருந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. குருமகா சன்னிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது திருவெண்காடு சோமுகுருக்களுக்கு அவரது பணியை பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கி கவுரவித்தார். இதில் திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான், கந்தசாமி தம்பிரான்;,சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உட்பட ஆதீன தம்பிரான் சுவாமிகள்,  பொதுமேலாளர் ரங்கராஜன், தலைமை கண்காணிப்பாளர் மணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar