Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிவாடி சோமலிங்கசுவாமி ... அயோத்தி ஸ்ரீதம் மடம் சார்பில் ராமேஸ்வரம் பக்தர்களுக்கு ரூ.39 லட்சத்தில் நிழற்குடை அயோத்தி ஸ்ரீதம் மடம் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கால பைரவாஷ்டமி; அச்சத்தை நீக்கி, வாழ்வில் வளம் தந்து காப்பார் காலபைரவர்
எழுத்தின் அளவு:
இன்று கால பைரவாஷ்டமி; அச்சத்தை நீக்கி, வாழ்வில் வளம் தந்து காப்பார் காலபைரவர்

பதிவு செய்த நாள்

05 டிச
2023
08:12

பைரவருக்கு உகந்த தினம் அஷ்டமி திதி. அதிலும் தேய்பிறை அஷ்டமி மிக முக்கியமானதாகும். மேலும், கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி அதைவிட மிகவும் சிறந்ததாகும். இதுவே, ‘மகா தேவாஷ்டமி’ என்று வட இந்திய மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது. ‘அஷ்டமி திதியா? வேண்டவே வேண்டாம் ’ என்று பொதுவாக ஒதுங்குகையில், நடந்தேறியச் சம்பவங்களை அந்நாளில் நினைத்தோ மானால் துன்பம், தீய சக்திகள் அகன்று, இன்பமும், நன்மையும் விளைந்த நன்னாளாக அது திகழ்வதை அறியலாம்.

அவந்திகாபுரி அரசனான வேதப்ரியன் சிவபக்தன். இவன் பூஜையில் ஆழ்ந்திருந்தபோது, அவனைக் கொல்ல வந்த அசுரன் தூஷணனைச் சம்ஹாரம் செய்து, மஹாகாலேஸ்வரராக உஜ்ஜயினியில் அருள்பாலிப்பவர் பைரவர். தீய சக்திகளை அடக்க வீர பராக்கிரமச் செயல்கள் புரிந்து, தென்னகத்தில் அட்ட வீரட்டானத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் மகேசன் எடுத்த சொரூபங்கள் பைரவத் திருக்கோலங்கள் எனப் போற்றப்படுகின்றன.

பரமேஸ்வரன் ருத்ர ரூபமெடுத்து, பிரம்ம தேவனின் ஆணவத்தை அடக்கி, ஒரு சிரசைக் கொய்தார். இதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு உள்ளாகி, கபாலம் ஏந்தி, பிட்சாடனராக அலைந்து, முடிவில் காசியை அடைந்தார். தேவியின் உதவியால் விமோசனம் பெற்றார். பின்னர், வீரபத்திரராகத் தோன்றினார். என்றும், தட்சனின் வேள்வித் தீயில் தன்னை மாய்த்துக் கொண்ட சதி தேவியின் உடலுடன் கோரத்தாண்டவமாடினார் என்றும் புராணக் கதைகள் வாயிலாக நாம் அறிவோம். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் குடிகொண்டு அவற்றைக் காப்பவராகவும், ஐம்பத் திரண்டு சக்தி பீடங்களில் அன்னைக்குப் பாதுகாவலராகவும் விளங்குபவர் பைரவர்.

பரண (பேணிக் காத்தல்), ரவண (அழித்தல்), வமண (தோற்றுவித்தல்) என்பதன் கூட்டெழுத்து தான், ‘பைரவர் ’ எனும் நாமம். அகந்தையினால் இழிச்செயல் புரிவோரைத் தண்டிப்பதால், ‘அமர்ஷகர்’ எனவும், எவ்வித உள்நோக்கமுமின்றி இழைக்கப்படும் பாபச் செயல்களைப் பொறுத்தருளுவதால், ‘பாபபக்ஷணர்’ என்றும் வேறு பெயர்களுண்டு. எந்தக் கட்டுப்பாடும் இன்றி கயவர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் தருகுரும்பனாக விளங்குவதால், ‘ஸ்வச்சந்தம்’ என்றும் அறியப்படுகிறார்.

ஈஸ்வரனின் ஆணைப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் பதினாறு வகை செல்வப் பேறுகளையும் அளிப்பவர்கள் அஷ்ட லக்ஷ்மியர். சொர்ண பைரவரிடமிருந்து பெற்ற அப்பேறுகளை அவர்கள் பக்தர்களுக்கு அளித்து வர, சக்தியின் வீர்யம் படிப்படியாகக் குறைகிறதாம்.

அதனால், அஷ்டமிதோறும், பைரவரை வழிபட்டு சக்திகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் முழுவதும் ஈடுபட்டிருப்பதால், பக்தர்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறதாம். அதனால்தான் அந்நாட்களில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிப்பதில்லை. அஷ்டலட்சுமிகள் வணங்கும் பைரவநாதரை அன்று (அஷ்டமியில்) பூஜிப்பதால் நன்மைகள் பெறலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

காலை, நண்பகல், மாலை மற்றும் இரவு வேளைகளில் பைரவரை அவருக்குரிய சுலோகங்களால் துதித்துப் பூஜிக்க, வாழ்வு வளம் பெறும். பைரவருக்கும் எட்டு என்ற எண்ணுக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உள்ளதால் அவருக்கு அஷ்ட விதார்ச்சனை என்னும் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. ஊரின் காவல் தெய்வமாகக் கருதப்படுவதால் கிராமங்களில் எளிதில் கிடைக்கும் எட்டுவிதமான மலர்கள், எட்டுவிதமான தளிர்கள், இலைகள் கொண்டு, எட்டு பேர் சுற்றி நின்று பைரவரின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி அர்ச்சிப்பது வழக்கம். நிவேதனமாக, நெய், தேனில் அமிழ்த்திய வடை, தேனில் ஊறிய இஞ்சி, கலந்த சாத வகைகள், பாயசம் முதலியன படைக்கப்படுகின்றன.

அஷ்டவிதார்ச்சனை செய்வதால் பைரவர் மனம் மகிழ்ந்து அன்பர்களின் மனதில் தோன்றும் அச்சத்தை நீக்கி, வாழ்வில் வளம் தந்து காப்பார் என்பது உறுதியான நம்பிக்கை. இப்படிப்பட்டவரை, ஆதிசங்கரர் பாடிப் பரவியது போன்று நாமும், ‘காசிகா புராதிநாத கால பைரவம் பஜே’ எனப் போற்றி வணங்குவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar