Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சனிப்பெயர்ச்சி ; வரும் இரண்டரை ... சங்கடம் தீர்ப்பாய் சனீஸ்வரா; திருநள்ளாரில் குவிந்த பக்தர்கள்.. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சங்கடம் தீர்ப்பாய் சனீஸ்வரா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாச்சியார்கோவிலில் கல்கருட சேவை; உயர்ந்து கொண்டே சென்ற கருடனின் எடை.. பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாச்சியார்கோவிலில் கல்கருட சேவை; உயர்ந்து கொண்டே சென்ற கருடனின் எடை.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

20 டிச
2023
10:12

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீனிவாசபெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் 20-வது தலமாகவும், பன்னிரு ஆழ்வார்களுல் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும் விளங்கிறது.

இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 16ம் தேதி கொடியேற்றமும், மாலை சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா நடந்தது.  தொடர்ந்து கடந்த 17ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் பெருமாள்- தாயார் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் நான்காம் நாளில் உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. பெருமாள் தாயார் வாகன மண்டபத்தில் எழுந்தருளியும், கல்கருடனில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்து சேவை சாதித்தார். தொடர்ந்து சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து வந்தனர். கருடபகவான் மண்டபம் எழுந்தருளிய போது ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வந்து காட்சியளித்தார். இந்த கருடசேவையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சினிவாசப்பெருமாள் கல்கருட வாகனத்திலும், வஞ்சுளவல்லித் தாயார் வெள்ளி அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருள ஓலைச் சப்பர வீதியுலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar