சனாதன தர்மம் நிலைத்து நிற்கும்.. ஹிந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும்; சடகோப ராமானுஜ ஜீயர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2024 09:01
ஸ்ரீவில்லிபுத்துார்: ஹிந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும். சனாதன தர்மத்தை இழித்து பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த திருப்பாவை முற்றோதல் மாநாட்டில் சடகோப ராமானுஜ ஜீயர் பேசினார்.
ஜீயர் பேசியதாவது: ஆண்டாள் தாயார் இல்லையெனில் உலகமே கிடையாது. சனாதன தர்மம் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இன்று கோயில் வழிபாடுகளில் பெண்கள் அதிகளவில் பங்கேற்பது சனாதன தர்மத்தின் எழுச்சி ஆகும். எந்த மதத்தையும் தாழ்வாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்பது எங்கள் கருத்து. அதே நேரம் சனாதன தர்மத்தையோ, ஹிந்து மதத்தையோ இழிவாக பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக ஹிந்து மதத்தையும், கடவுள்களையும் தப்பு தப்பாக பேசுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனைக் கண்டு ஹிந்துக்கள் விழித்து, சிலிர்த்து எழ வேண்டும் என்றார்.