Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ... தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை; பூசணியில் தீபமேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுபதீஸ்வரர் கோவிலில் உலா வந்த உடைந்த நடராஜர் சிலை; மூடி மறைத்த அறநிலையத்துறை அதிகாரிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பசுபதீஸ்வரர் கோவிலில்  உலா வந்த உடைந்த நடராஜர் சிலை; மூடி மறைத்த அறநிலையத்துறை அதிகாரிகள்

பதிவு செய்த நாள்

05 ஜன
2024
02:01

கரூர்; கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நடராஜர் சிலை சேதமடைந்ததை, அதிகாரிகள் மூடி மறைத்துள்ளனர்.

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சோழ மன்னனர்களால் கட்டப்பட்டதாகும். தமிழ்நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற, 274 சிவன் கோவில்களில், இது 211-வது ஆலயம். இங்கு பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 27ல் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடந்தது. அப்போது, நடராஜர் சிலை சேதமடைந்ததை மறைத்துள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை மீது புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, ஹிந்து முன்னணி கரூர் நகர துணைத் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:  கரூர், பசுபதீஸ்வரர் கோவில் மூலவர் அருகில் உள்ள மகா  மண்டபத்தில் சிவகாமசுந்தரி, சமேத நடராஜர் (ஐம்பொன் சிலை) வீற்றிருந்து அருள்புரிந்து வருகின்றனர். ஆருத்ரா தரிசனத்தன்று அபிஷேகத்தை தொடர்ந்து, ராஜகோபுரத்திற்கு வெளியில் சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனியாக எழுந்தருளினர். அப்போது சப்பரத்தில் ஏற்றும் போது, நடராஜர் சிலையின் கீழ் பகுதி உடைந்து இருந்தது. அதை கயிறு  கட்டி, நடராஜர் திருவடியை அர்ச்சகர் கைகளால் பிடித்து வெளிப்பிரகாரம் வலம் வந்துள்ளார். பின், கோவில் உள்ளே சப்பரத்துடன் கொண்டு சென்றுள்ளனர். நடராஜரை பல்லக்கில் கொண்டு செல்லாதது குறித்து பக்தர்கள் கேட்டதற்கு, சரியான பதில் இல்லை. இந்நிலையில், கோவிலில் தரினம் செய்ய சென்ற பக்தர்கள், நடராஜ பெருமான் சன்னதியில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  அதுபற்றி விசாரித்து பிறகு, சுவாமி சிலையின் பாதம் உடைந்து விட்ட தகவல் தெரிந்தது. மேலும், பின்னமாக (உடைந்த) நடராஜர் திருமேனியை  ஊர்வலமாக சென்றிருப்பது ஆகம விதிமீறலாகும். இது குறித்து வெளியில் தெரிவிக்காமல் ஹிந்துசமய அறநிலையத்துறை மூடி மறைத்துள்ளது. இவ்வாறு கூறினார். கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சரவணன் கூறுகையில்,‘‘ கோவிலில் சுவாமி புறப்பாடு முடிந்த பின்,  சிலை சேதமடைந்தது தெரியவந்தது. இதனால் ஆகம விதிப்படி, பரிகார பூஜை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை- -ஸ்தபதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று (நேற்று)  பார்வையிட்டார். அவரது ஆலோசனையின் படி நடராஜர் சிலை சரி செய்து மீண்டும் வைக்கப்படும்,’‘ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar