Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... காஞ்சிபுரம் சங்கரமடத்தில் மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வி.ஐ.பி., அமர்வு தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வி.ஐ.பி., அமர்வு தரிசனம் ரத்து

பதிவு செய்த நாள்

06 ஜன
2024
07:01

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வி.ஐ.பி., அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, மே மாதம் வரை எத்தனை பக்தர்கள் வந்தாலும், பவுர்ணமி நாட்கள் தவிர மற்ற நாட்களில், ஒரு மணி முதல் இரண்டு மணி நேரத்தில் தரிசனம் செய்ய வசதியாக, வடக்கு அம்மணி  அம்மன் கோபுரம், கிழக்கு ராஜகோபுரம், தெற்கு திருமஞ்சன கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, மேற்கு கோபுரம் வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதனால் எளிதாக, விரைவாக தரிசனம் செய்தனர். ஆனால், கடந்த ஜூனில் தி.மு.க., நகரமன்ற முன்னாள் தலைவர் ஸ்ரீதரின் அண்ணன் ஜீவானந்தம், தலைமையில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது. அன்று முதல் வி.ஐ.பி.,க்களுக்கு அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும், மற்ற அனைவரும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் செயற்கையாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மேலும், சுவாமி, அம்மன் சன்னதியில் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்காததால், நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.  இந்நிலையில் கடந்த மாதம், 27ம் தேதி தி.மு.க., பிரமுகர் ஸ்ரீதரன், குடும்ப உறுப்பினர், அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு மறைக்காமல் தரிசனம் செய்யுமாறு கூறிய, இன்ஸ்பெக்டர் காந்திமதி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நகர மக்களிடையே தி.மு.க., மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை கண்டித்து ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் மாலை, அறங்காவலர் குழு அவசர கூட்டம் கூட்டப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர்கள் பங்கேற்றனர். கோவில் கருவறை முன் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அபிஷேகதாரர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். இதன்படி கோவிலில் நேற்று முதல், வி.ஐ.பி.,  அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்: கூடலூரில் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்ய ... மேலும்
 
temple news
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் ஷெட் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆவணி ... மேலும்
 
temple news
விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது. இந்த சர்ச் திருவிழா ஆக. 31ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar