Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை கடைசி சோமவாரம்; ஆதி ... காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 108 கலசங்கள் நன்கொடை வழங்கிய பகதர் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை துவக்கம்; 100 நாட்கள் நடைபெறுகிறது
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை துவக்கம்; 100 நாட்கள் நடைபெறுகிறது

பதிவு செய்த நாள்

12 பிப்
2024
10:02

பிள்ளையார்பட்டி; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி இன்று கோடி அர்ச்சனைப் பெருவிழா துவங்கியது. 100 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

நகரத்தார் கோயிலான இங்கு  முதன் முறையாக கோடி அர்ச்சனைப் பெருவிழா துவங்கியுள்ளது. உலக உயிரினஙகள் நன்மை  பெற வேண்டி தினசரி ஒரு லட்சம் அர்ச்சனை வீதம் 100 நாட்களுக்கு நடைபெறுகிறது. நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் துவங்கின. தொடர்ந்து மாலை 6:25 மணி அளவில் விநாயகர் மற்றும் மருதீசர் சன்னதி முன் மண்டபத்தில் உற்ஸவ விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன், பூலாங்குறிச்சி சுப. முத்துராமன் ஆகியோருக்கு சங்கல்பம் செய்யப்பட்டு முதல் நாள் கோடி அர்ச்சனை துவங்கியது. கோயில் தலைமைக் குருக்கள் பிச்சைக்குருக்கள், சோமசுந்தர குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள் பங்கேற்றனர். மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் சிவாச்சார்யர்கள் கோடி அர்ச்சனை மேற்கொண்டனர். இந்த விழா தினசரி  காலை, மாலை இருவேளைகளில் நடைபெறும் இக்கோயிலில் முன்பு உலக நன்மை வேண்டி 1008 கலசாபிேஷகம், அதிருத்ர மகாயாகம் நடத்தப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய கோடி அர்ச்சனை  மே 23 ல் நிறைவு பெறுகிறது.  கோடி அர்ச்சனையில் பங்கேற்க விரும்பம் பக்தர்கள் 9042083871; 9042085871 ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar